நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ). இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான எம்எஸ் தோனிக்கு ரூ.6 கோடியும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு மாதந்தோறும் ரூ.19 லட்சமும் கொடுக்கிறது. இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக எஸ்பிஐ பணம் கொடுத்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி, மகேந்திர சிங் தோனியை தனது பிராண்ட் தூதராக நியமனம் செய்தது. அதற்கான கட்டணமாக எம்எஸ் தோனி ரூ.6 கோடி வாங்குகிறார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எஸ்பிஐ வங்கியின் விளம்பர பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி 6 ஆண்டுகளாகி விட்டது. இருப்பினும், பிராண்ட் ஒப்பந்தங்கள், வணிக முதலீடுகள் மற்றும் பிற வழிகளில் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 அக்டோபர் 28ம் தேதியன்று எஸ்பிஐ வெளியிட்ட பதிவில், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறியதாவது, எஸ்பிஐயின் பிராண்ட் தூதராக எம்எஸ் தோனியை இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். திருப்திகரமான வாடிக்கையாளராக எஸ்பிஐயுடனான தோனியின் தொடர்பு, அவரை எங்கள் பிராண்டின் நெறிமுறைகளின் சரியான உருவகமாக்குகிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், நம்பிக்கை. நேர்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் நாட்டிற்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்து இருந்தார்.
பாலிவுட் சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு எஸ்பிஐ வங்கி மாதந்தோறும் ரூ.18.9 லட்சத்தை வாடகையாக கொடுத்து வருகிறது. அமிதாப் பச்சன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு 3,150 சதுர அடி அளவுள்ள இடத்தை எஸ்பிஐ வங்கிக்கு லீசுக்கு கொடுத்துள்ளார். மொத்தம் 15 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்ததுக்கு கொடுத்துள்ளார்.
இந்த குத்தகை ஒப்பந்தத்தில், வாடகை உயர்வுகளும் அடங்கும். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மாத வாடகை ரூ.23.6 லட்சமாகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.29.5 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரி 24ம் தேதி நிலவரப்படி. எஸ்பிஐ வங்கியில் இருந்து மாதத்திற்கு ரூ.18.9 லட்சத்தை வாடகையாக அமிதாப் பச்சன் பெறுகிறார்.
எஸ்பிஐ வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் நிகர லாபமாக ரூ.16,891 கோடி ஈட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எஸ்பிஐ பங்கின விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.62 சதவீதம் உயர்ந்து ரூ.754.05ஆக இருந்தது. எஸ்பிஐ பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6.72 லட்சம் கோடியாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications