மக்கள் பலர் தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்கு தகுந்தாற் போல் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் ரெக்கரிங் டெபாசிட் திட்டம். மொத்தமாக தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மூலம் மாதா மாதம் முதலீடு செய்யலாம்.
ஹர் கர் லக்பதி: முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு புதிய ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது அதிகபட்ச வட்டியும் வழங்கப்படுகிறது. அதுவும் மூத்த குடிமக்களாக இருந்தால் இன்னும் சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். எஸ்பிஐ வங்கியில்

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வட்டியுடன் கூடிய வருமானம் வழங்கப்படும். சாமானியர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிதி இலக்குகளை அடைய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம்.
எஸ்பிஐ வங்கியில் "ஹர் கர் லக்பதி" திட்டத்தின் கீழ் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களாக இருந்தால் 3 முதல் 4 வருட RD திட்டங்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதமும், மற்ற காலகட்டங்களுக்கு 6.50 சதவீத வட்டி விதமும் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 3 முதல் 4 வருட காலத்திற்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மற்ற காலகட்டங்களுக்கு 7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பாதுகாப்பான அதே நேரம் உத்தரவாதமான வருமானம் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?: எஸ்பிஐ வங்கியின் ஹர் கர் லக்பதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 3 முதல் 10 ஆண்டுகள். நீங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முடியும்.
ஹர் கர் லக்பதி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக 600 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். நீங்கள் ரூ1 லட்சம் பெற விரும்புகிறீர்கள்... ஆனால் சேமிப்பதே தெரியாமல் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் மாதம் 576 ரூபாய் முதலீடு செய்யலாம். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் 7 சதவீத வட்டி விகிதத்தில் சேமிப்பதே தெரியாமல் ரூ.1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறலாம். 10 வருடங்களுக்கு ரூ. 69,120 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 30,932 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் 1,00,052 ரூபாயை வருமானமாகப் பெறலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications