இந்தியாவின் முன்னணி வங்கிச் சேவை நிறுவனமான எஸ்பிஐ தங்களுடைய கிரெடிட் கார்டுகளில் வழங்கி வந்த பல்வேறு பலன்களை மாற்றி அமைத்திருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரெடிட் கார்டு விநியோக நிறுவனமாக எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. எஸ்பிஐ நிறுவனம் தங்களுடைய கிரெடிட் கார்டில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு ரிவார்டுகளை தற்போது மாற்றி அமைத்துள்ளது. Club Vistara SBI Credit Card, Club Vistara SBI PRIME Credit Card, SimplyCLICK SBI Card, Air India SBI Platinum Credit Card மற்றும் Air India SBI Signature Credit Card ஆகியவற்றில் இதுநாள் வரை கிடைத்த பலன்கள் இனி கிடைக்காது. கார்டினை ரினீவல் செய்யும் போதும், மைல்ஸ்டோன்களை எட்டும் போதும் வழங்கி வந்த பலன்களில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி,

Club Vistara SBI Credit Card மற்றும் Club Vistara SBI PRIME Credit Card: இந்த கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரினீவல் மூலம் இது நாள் வரை கிடைத்து வந்த எக்கானமி மற்றும் பிரீமியம் டிக்கெட் வவுச்சர்கள் இனி கிடைக்காது. மேலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 1.25 லட்சம், 2.5 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தவர்களுக்கு வழங்கி வந்த மைல் ஸ்டோன்களுக்கான பெனிஃபிட் டிக்கெட் வவுச்சர்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கார்டு பயன்படுத்துவோருக்கு ரினீவலுக்காக இது நாள் வரை வசூல் செய்யப்பட்ட 2,999 ரூபாய் கட்டணத்தை இனி செலுத்த வேண்டாம் என எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SimplyCLICK SBI Card: தற்போது இந்த கார்டு பயன்படுத்துவோர் ஸ்விக்கியில் செய்யும் செலவுக்கு 10X என்ற அளவில் ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன. இது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5X என குறைக்கப்படுகிறது. அதே வேளையில் அப்போலோ 24X7, BookMyShow, Cleartrip, Domino's, IGP, Myntra, Netmeds மற்றும் Yatra ஆகிய தளங்களில் இந்த கார்டுகளை கொண்டு செய்யும் பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் 10X ரிவார்ட் பாயிண்டுகள் தொடருமாம்.
Air India SBI Platinum Credit Card: ஏர் இந்தியா டிக்கெட்டுகளை அதன் மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக இந்த கார்டினை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 15 ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன. இது வரும் 1ஆம் தேதி முதல் 5 பாயிண்டுகள் என குறைக்கப்பட உள்ளன.
Air India SBI Signature Credit Card: ஏர் இந்தியா டிக்கெட்டுகளை அதன் மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக இந்த கார்டினை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 30 ரிவார்ட் பாயிண்டுகள் வழங்கப்படுகின்றன. இது வரும் 1ஆம் தேதி முதல் 10 பாயிண்டுகள் என குறைக்கப்பட உள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications