SBI முக்கிய அறிவிப்பு.. கடன், வைப்பு நிதிக்கு வட்டி உயர்வு.. மக்களே உஷார்..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை அதாவது எம்சிஎல்ஆர் விகிதத்தை அனைத்து கடன்களுக்கும் 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.10 (பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் இது வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம், ஈஎம்ஐ தொகை உயர உள்ளது.

இதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வட்டியை உயர்த்தியுள்ளது. வைப்பு நிதிக்கான புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 15 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்

இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

இதன் மூலம் ஆர்பிஐ-யின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்ந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வைப்பு நிதி மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

MCLR விகிதம்

MCLR விகிதம்

MCLR என்பது வங்கியால் கடன் கொடுக்க முடியாத குறைந்தபட்ச கடன் விகிதம் ஆகும். அதை அடிப்படையாகக் கொண்டு தான் கடன்களுக்கு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும், மேலும் இந்த வட்டி விகிதம் தனிநபரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடுவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கடனுக்கும் மாறுபடும்.

கடனுக்கான வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதம்

எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எஸ்பிஐ ஓவர்நைட் எம்சிஎல்ஆர் விகிதத்தை 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் 10Bps உயர்த்தப்பட்டு 8.00 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 எஸ்பிஐ வங்கி கடன்

எஸ்பிஐ வங்கி கடன்

இதேபோல் எஸ்பிஐ வங்கி அதன் மூன்று மாத MCLR விகிதம் 8.10 சதவீதமாக உயர்த்தியுள்ளது,ஆறு மாத எம்சிஎல்ஆர் 8.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுக் கால MCLR விகிதம் 8.60 சதவீதமாக உள்ளது, 3 ஆண்டு MCLR விகிதம் 8.70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வைப்பு நிதி

வைப்பு நிதி

இதேபோல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிரந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், இது 2 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள வைப்பு நிதிக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

வைப்பு நிதி வட்டி விகிதம்

வைப்பு நிதி வட்டி விகிதம்

இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கு 7.10 சதவீத வட்டி வருமானம் வழங்கும் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. மேலும் வழக்கம் போல் அனைத்து வைப்பு நிதி காலத்திற்கும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதத்தில் கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள்.

மூத்த குடிமக்கள் வட்டி விகிதம்

மூத்த குடிமக்கள் வட்டி விகிதம்

உதாரணமாக 1 வருடம் முதல் 2 வருடத்திற்குக் கீழ் உள்ள அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

வட்டி வருமானம் உயர்வு

வட்டி வருமானம் உயர்வு

மேலும் 2 வருடம் முதல் 3 வருடத்திற்குக் கீழ் முதிர்வு காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 3-10 வருட முதிர்வு காலம் கொண்ட நிரந்தர வைப்பு நிதிக்கு 6.50% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு டிசம்பர் 13 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+