இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் MCLR மற்றும் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இப்புதிய வட்டி விகித உயர்வு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான அறிவிப்பின் படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் பேஸ் ரேட் 0.15 சதவீதமும், MCLR விகிதம் 0.10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் எம்சிஎல்ஆர் என்பது ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான குறைந்தபட்ச கடன் அளவாகும்.

இந்த எம்சிஎல்ஆர் விகிதம் கடன் வகை, கடன் பெறும் விண்ணப்பதாரர், கடன் காலம், சிபில் ஸ்கோர் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகமாகும். மேலும் எம்சிஎல்ஆர் விகிதம் தற்போது 8 முதஸ் 8.85 சதவீதம் வரையில் கணக்கிடப்படும். இதேபோல் எஸ்பிஐ வங்கி சில கடன்களுக்குப் பேஸ் ரேட் அடிப்படையிலும் கடன் வழங்கி வரும் வேளையில், இன்று முதல் பேஸ் ரேட் அளவு 10.10 சதவீதத்தில் இருந்து 10.25 சதவீதம் வரையில் அதிகரித்து வருகிறது.
எம்சிஎல்ஆர் அளவீட்டில் ஒரு நாளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும், ஒரு மாதம் வரையிலான காலக்கட்டத்திற்கு 8.2 சதவீதமாகவும், 6 மாத காலக்கட்டத்திற்கு 8.55 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு 8.65 சதவீதமாகவும், 2 வருடத்திற்கு 8.75 சதவீதமாகவும், 3 வருடத்திற்கு 8.85 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதேபோல் பென்ச்மார்க் ப்ரைம் லென்டிங் விகிதம் 0.25 சதவீதம் அதிகரித்து 15.00 சதவீதமாக உள்ளது. முன்பு 14.85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம், ஈஎம்ஐ தொகை மாற உள்ளது.
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விழாக்காலச் சலுகையை வீட்டுக்கடனுக்குச் சுமார் 0.65 சதவீதம் வரையில் வட்டியில் தள்ளுபடி அளிக்கிறது. இந்தச் சலுகையின் கீழ் கடன் வாங்கினால் ஒரு வருடம் வரையில் வட்டி விகிதம் மாறாது. இதனால் புதிய வட்டி விகிதம் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கும், கடன் வாங்கி ஒரு வருடத்திற்கும் குறைந்த காலகட்டமே ஆன வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது.


Click it and Unblock the Notifications