இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகள் குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும் மக்கள் இக்குறிப்பிட காலத்தில் மட்டும் அதன் பயன்பாடு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த சேவைகள் நிறுத்தப்படும்?: இணையதள வங்கி சேவை, யோனோ லைட் (Yono Lite), யோனோ பிஸ்னஸ் வெப் & மொபைல் ஆப் (Yono Business Web & Mobile App), யோனோ (YONO), யூபிஐ (UPI) ஆகியவை இயங்காது என எஸ்பிஐ வங்கி நிர்வாக தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

எந்த நேரத்தில் சேவைகள் நிறுத்தப்படும்?: மார்ச் 23, 2024 அன்று காலை 1:10 மணி முதல் 2:10 மணி வரை இந்த சேவைகளை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வங்கி மற்றும் நிதி செயல்பாடுகளை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட உள்ளது.
எந்தெந்த சேவைகள் கிடைக்கும்?: இந்த இடைப்பட்ட நேரத்தில், யூபிஐ லைட் (UPI Lite) மற்றும் ஏ.டி.எம். (ATM) சேவைகள் மட்டுமே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இரவு நேரம் என்பதால் பெரிய பிரச்சனை இருக்காது, ஆனால் முன்கூட்டிய வங்கி மற்றும் நிதி செயல்பாடுகளை முடித்துக்கொள்ளுவது சிறந்தது.
யூபிஐ லைட் என்றால் என்ன?: குறைந்த தொகை பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்காக NPCI உருவாக்கிய ஒரு பொது பயன்பாடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் யூபிஐ பின் இல்லாமல் பேமெண்ட் செய்ய முடியும்.
யு.பி.ஐ. லைட் இயக்குவது எப்படி?:
படி 1: முதலில், உங்கள் யு.பி.ஐ. ஆப்-ஐ திறந்து கொள்ளுங்கள்.
படி 2: ஹோம் ஸ்கிரீனில், யு.பி.ஐ. லைட்-ஐ இயக்குவதற்கான ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
படி 3: யு.பி.ஐ. லைட் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
படி 4: யு.பி.ஐ. லைட்டில் சேர்க்க விரும்பும் தொகையை உள்ளிட்டு, பணம் எடுக்க வேண்டிய வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும்.
படி 5: உங்கள் யு.பி.ஐ. பின்னை உள்ளிடவும்.
படி 6: இதோடு யு.பி.ஐ. லைட் வெற்றிகரமாக இயக்கப்பட்டுவிட்டது!
யு.பி.ஐ. லைட் மூலம் பணம் செலுத்துவது எப்படி?:
படி 1: முதலில், உங்கள் யு.பி.ஐ. ஆப்-ஐ திறந்து கொள்ளுங்கள்.
படி 2: பணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
படி 3: செலுத்த வேண்டிய தொகையை உள்ளிடவும்.
படி 4: யு.பி.ஐ. பின் இல்லாமல் பணம் வெற்றிகரமாக அனுப்பப்படும்.
யு.பி.ஐ. லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.500 வரையிலான தொகைக்கு மட்டுமே யு.பி.ஐ. பின் தேவைப்படாது. ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை பரிவர்த்தனை செய்யலாம். குறைந்த தொகை பரிவர்த்தனைகளுக்கு யு.பி.ஐ. லைட் ஒரு வசதியான மற்றும் வேகமான தீர்வாகும்.
SBI இணையதள அறிவிப்பில் , "பராமரிப்பு பணிகள் காரணமாக, இணையதள வங்கி சேவை, யோனோ லைட், யோனோ பிசினஸ் வெப் & மொபைல் ஆப், யோனோ மற்றும் யூபிஐ சேவைகள் மார்ச் 23, 2024 அன்று காலை 1:10 மணி முதல் 2:10 மணி வரை இயக்காது. இந்த இடைப்பட்ட நேரத்தில், யூபிஐ லைட் மற்றும் ஏ.டி.எம். சேவைகள் மட்டுமே கிடைக்கும்." என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications