முதலீடுகள் பெரும்பாலும் பாதுகாப்பானதாகவும், பணத்தை அதிகரிக்க செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். நாட்டில் எண்ணற்ற முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை நாம்தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது சாமானிய மக்களிடமும் சேமிப்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பணத்தை எப்படி சரியான இடத்தில் முதலீடு செய்வது என்று அறிந்திருக்க மாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் சார்ந்த ஆவணங்களை புரிந்துகொண்டு பின்னர் முதலீடு செய்யலாம்.
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு அதிலுள்ள ரிஸ்க் மற்றும் முதலீட்டு காலத்தை ஒப்பிட்டுப் பார்க்க அறிவுறுத்தப்படுகின்றன.இங்கே, 3 வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட கால முதலீட்டில் மிகப்பெரும் செல்வத்தை உருவாக்குவது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளன. ஆம், இந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் இப்போது ரூ.1 கோடியாக வளர்ந்துள்ளது. அவை என்னனென்ன என்பதை பார்க்கலாம்.

ஃபிராங்க்ளின் இந்தியா ப்ரைமா ஃபண்ட்: இந்த மிட்கேப் ஃபண்ட் டிசம்பர் 1993 இல் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்டில் 1 லட்ச ரூபாய் முதலீட்டை இப்போது அது ரூ.2.31 கோடி ரூபாயாக மாற்றியுள்ளது. இது 19.59% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) பதிவு செய்துள்ளது. எனவே தங்கள் மூலதனத்தில் பெரிய ஆதாயங்களைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்: இந்த லார்ஜ் கேப் ஃபண்ட் டிசம்பர் 1993 இல் தொடங்கப்பட்டது. ரூ.1 லட்சம் முதலீட்டில் 19.28% சிஏஜிஆர் உடன் சுமார் ரூ.2.13 கோடி வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த திட்டமானது பெரிய முதலீட்டு பங்குகளில் முதலீடு செய்வதால், இது நிலையான வருமானம் மற்றும் வளர்ச்சியை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட்: இந்த ஃபண்ட் பிப்ரவரி 1993 இல் தொடங்கப்பட்ட ELSS பிரிவில் உள்ள பழமையான திட்டங்களில் ஒன்றாகும். இதன் ஆரம்பகால முதலீடான ரூ. 1 லட்சமாக இப்போது ரூ.1.21 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் சராசரி ஆண்டு வருமானம் 16.68% ஆக உள்ளது. இதில் வரி நன்மைகள் கிடைக்கும். அத்துடன் முதலீடு மூன்று வருட லாக்-இன் மூலம் வருவதால் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான முதலீடாக இது இருக்கும்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நிலையான மற்றும் சரியான முதலீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில், மார்ச் 31, 2024 நிலவரப்படி ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.10,108 கோடி நிர்வாகத்தின் கீழ் சொத்துக்களைக் கொண்டுள்ளது. அதேபோல், ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் ரூ.7,691 கோடி நிர்வாகத்தின் கீழ் சொத்துக்களைக் கொண்டுள்ளது. எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டின் சொத்துக்கள் அதே தேதியில் ரூ.21,976 கோடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை செய்வதற்கு முன் ரிஸ்க் மற்றும் முதலீட்டு காலத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் ரூ.500 இருந்தாலே போதும். இதில் அனைவரும் இணையலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இணைவதற்கு முன் ஆவணங்களை சரிபார்த்து மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications