நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ரூ.42,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அந்தவகையில், ரூ.8,312 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது எஸ்பிஐ. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8,061 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.6,344 கோடியும் தள்ளுபடி செய்துள்ளன. மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (ரூ. 5,925 கோடி) கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன .
2023-24 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. 2022-23ல் இது 1.18 லட்சம் கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்கள் ரூ.42,035 கோடியாகவும், ரூ.37,253 கோடி வசூலிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2023-24ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் ரூ.1.18 லட்சம் கோடியாக இருந்ததாகவும் கூறினார்.
வங்கிகள் தங்கள் கணக்குகளை சரிசெய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வரிச் சலுகைகளைப் பெறுவதைத் தவிர, அவை திறமையான மூலதனப் பயன்பாட்டையும் வழங்குகின்றன. எனவே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களின் கொள்கைகளின்படி அவர்கள் வாராக் கடனை தள்ளுபடி செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ரைட் ஆஃப் செய்யப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு கடன் வாங்கியவரிடம் உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட கடனை திரும்பப் பெறும் செயல்முறை தொடரும் என்றும், தள்ளுபடியால் கடன் வாங்கியவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
கடனை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ, பிஎன்பி, யூனியன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா முன்னணியில் உள்ளன. இந்த தள்ளுபடிகள் கடன் வாங்குபவர்களின் பொறுப்புகளைத் தள்ளுபடி செய்யாது என்றும், மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications