இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது கடன் வழங்கும் வட்டி விகிதமான எம்சிஎல்ஆர் (MCLR) அளவை மீண்டும் 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வாகனம், வீடு போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 15, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இதற்கு முன்னர் ஜூன் 2024 இல் எஸ்பிஐ எம்சிஎல்ஆரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கியின் தளத்தில் வெளியான தகவலின்படி, ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் 8.85%லிருந்து 8.95% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதங்கள் 8.20% முதல் 9.10% வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்குரிய எம்சிஎல்ஆர் 8.20% ஆகவும், ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் முறையே 8.45% மற்றும் 8.50% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 8.85% ஆகவும், ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் 8.95% ஆகவும், இரண்டு வருடங்களுக்கான எம்சிஎல்ஆர் 9.05% ஆகவும், மூன்று வருடங்களுக்கான எம்சிஎல்ஆர் 9.10% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வாகன கடன் & தனிநபர் கடன்: எஸ்பிஐ வாகன கடன்கள் ஒரு வருட எம்சிஎல்ஆர் உடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், தனிநபர் கடன்கள் இரண்டு வருட எம்சிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஐ இபிஎல்ஆர்: எஸ்பிஐ எக்ஸ்டர்னல் பென்ச்மார்க் கடன் விகிதம் (EBLR) 9.15% ஆக மாற்றமில்லாமல் உள்ளது. இது ரெபோ விகிதம் (6.50%) + பரப்பு (2.65%) ஆகும். அனைத்து வீட்டுக் கடன்களும் வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதம் 8.50% முதல் 9.65% வரை மாறுபடும்.
எம்சிஎல்ஆர் என்றால் என்ன?: ஒரு வங்கி வழங்கக்கூடிய குறைந்தபட்ச கடன் விகிதம் எம்சிஎல்ஆர் (Marginal Cost of Funds-based Lending Rate) எனப்படும்.


Click it and Unblock the Notifications