இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிதாக ஒரு சிறப்பு டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சிறப்புத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் அளிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக இந்தச் சிறப்பு வைப்பு நிதி திட்டத்திற்குக் கூடுதலான வட்டி வருமானத்தையும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளதால் சாமானிய மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இத்திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பிளாட்டினம் டெபாசிட் திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஒரு குறுகிய காலத் திட்டத்திற்கும், சிறப்புக் குறுகிய காலத் திட்டத்திற்கும் அளிக்கப்பட்டு உள்ளது.
75 நாள் முதிர்வு காலம்
75 நாள் முதிர்வு காலம் கொண்ட டர்ம் டெபாசிட் திட்டத்திற்கும், 75 மாதம் முதிர்வு காலம் கொண்டு இரு டெபாசிட் திட்டத்திற்குப் பிற திட்டங்களைக் காட்டிலும் 0.15 சதவீதம் வரையிலான அதிக வட்டி வருமானத்தை அளிக்க உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
சிறப்பு வைப்பு நிதி
தனிநபர்கள் தங்கள் விருப்பதின் பெயரில் சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 525 நாள், 2250 நாள் கொண்ட திட்டத்தையும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இந்தச் சலுகை 2 கோடி ரூபாய்க்குக் குறைவாக வைப்புத் தொகை கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்
மேலும் இத்திட்டம் செப்டம்பர் 14, 2021 வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதாலும், தற்போது சந்தையில் இருக்கும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் என்பதாலும் இந்தச் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
வட்டி விகிதம் அளவீடுகள்
தற்போது எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 75 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்திற்குத் தற்போது 3.90 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது, தற்போது சிறப்புச் சலுகை அடிப்படையில் 3.95 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
பெரிய திட்டங்கள்
இதேபோல் 525 முதிர்வு நாள் கொண்ட வைப்பு நிதிக்கு 5 சதவீதத்தில் இருந்து 5.10 சதவீதமும், 2250 முதிர்வு நாள் அதாவது 75 மாத முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 5.40 சதவீத வட்டியில் இருந்து 5.55 சதவீத வட்டி வருமானத்தை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது.
இதேபோலவே மூத்தகுடி மக்களுக்குமான திட்டத்திற்கு 0.05 சதவீதம், 0.10 சதவீதம், 0.15 சதவீதம் கூடுதலான வட்டி வருமானத்தை அளிக்கிறது எஸ்பிஐ வங்கி.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications