வங்கிகளில் டெபாசிட்கள் குறைந்து வருவது குறித்த செய்தி சமீபத்தில் வெளியானது. இதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு வங்கிகளும் புதுப் புது திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பஞ்சாப் நேஷனல் பேங்க் 2 புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் 2 புதிய டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹர் கர் லக்பதி மற்றும் SBI பேட்ரான்ஸ் என்ற 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஹர் கர் லக்பதி என்பது ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.
SBI பேட்ரான்ஸ் திட்டம் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இந்த புதிய திட்டங்கள் மேம்பட்ட வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கும் அதிக வருமானத்தை வழங்குவதற்காக SBI வங்கி இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

SBI பேட்ரான்ஸ் டெபாசிட் திட்டத்தில் ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக 10 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது. தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 1 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.80 சதவீதமும், 2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.75 சதவீதமும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.5 சதவீதமும் வழங்கப்படுகிறது.
12 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து பலனடையலாம். எஸ்பிஐ பேங்க் டெபாசிட்களில் சுமார் 23 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. சந்தை மதிப்பை உயர்த்துவதற்காக வங்கி புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சேர்மேன் சி.எஸ். செட்டி கூறுகையில், "நிதி வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எங்கள் வாடிக்கையாளர்களின் கனவுகளுக்கு ஏற்பவும் டெபாசிட் திட்டங்களை உருவாக்க திட்டம் வைத்துள்ளோம்", என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த முயற்சி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவே சேமிக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தை குறித்தும் பரிசீலிக்கலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications