புதிய ஃபாஸ்டேக் டிசைனை அறிமுகப்படுத்தும் SBI பேங்க்.. எந்த வாகனங்களுக்கு தெரியுமா?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் அதன் FASTagக்கான புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டண செயல்முறை எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இன்றி தவறாக பணம் திரும்பப் பெறுவதையும் தடுக்கும் நோக்கில் இந்த புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி VC 4 டேக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் என்பது, கட்டண சாவடிகளில் பணம் செலுத்த உதவும் கட்டண முறையாகும். இது உங்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்டு மீது ஒட்டப்படுகிறது. ஃபாஸ்டேக் பயன்படுத்தும் போது, கட்டண சாவடி கருவிகள் உங்கள் வாகனத்தைக் கண்டறிந்து, உங்கள் கணக்கில் இருந்து தானாக கட்டணத்தை எடுக்கும்.

 புதிய ஃபாஸ்டேக் டிசைனை அறிமுகப்படுத்தும் SBI பேங்க்.. எந்த வாகனங்களுக்கு தெரியுமா?

SBI-இன் புதிய ஃபாஸ்டேக்கை யார் பயன்படுத்தலாம்?: இந்த புதிய ஃபாஸ்டேக் வடிவமைப்பு கார், ஜீப், வேன் போன்றவற்றுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக SBI கூறியுள்ளது. இது சுங்க சாவடியின் ஊழியர்களுக்கு தவறான வாகனங்களை எளிதாக அடையாளம் காண உதவும். தற்போது, VC 4 டேக்குகள் லாரிகள், ஜீப்கள் போன்றவை மீது ஒட்டப்படுகின்றன.

SBI-இன் புதிய ஃபாஸ்டேக் வடிவமைப்பு, வாகனங்களின் வகுப்பை எளிதாக அடையாளம் காண உதவும் மற்றும் கட்டண சாவடி ஊழியர்கள் தவறான வகுப்பின் வாகனங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க உதவும். மேலும் சரியான கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருவாயை இந்த புதிய ஃபாஸ்டேக் வடிவமைப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 30, 2024-அன்று SBI, இந்தியாவின் முதல் MTS RuPay NCMC ப்ரீபெய்ட் கார்டையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. "MTS RuPay NCMC ப்ரீபெய்ட் கார்டு, மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், படகுகள், சுங்கச்சாவடிகள் மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து NCMC போக்குவரத்து திட்டங்களுக்கும் தடையற்ற, ஆஃப்லைன் கட்டண தீர்வை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று SBI பேங்க் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

SBI இன் NCMC ப்ரீபெய்ட் கார்டுகளை நிர்வகிப்பதற்காக OneView என்ற மொபைல் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு ஒரே தளத்திலிருந்து தங்கள் கார்டுகளை டாப்-அப், டிராக் மற்றும் நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.

SBI-இன் தலைவர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி கூறுகையில், MTS கார்டு அறிமுகம், OneView மொபைல் அப்ளிகேஷன் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட SBI FASTag ஆகியவற்றின் அறிமுகம் பொது போக்குவரத்து அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் இந்த அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+