சென்னை: நம் அனைவருக்கும் தெரியும் 5G தொழில்நுட்பம் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று. ஆனால் இந்த 5G தொழில்நுட்பத்தில் வோடபோன் ஐடியா (Vi ) பின்தங்கி உள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் பண பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான அரசு நடத்தும் கடன் வழங்குநர்களின் கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான வோடபோன் ஐடியாவுக்கு (Vi) ரூ.14,000 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
கடுமையான இழப்புகளில் இருந்து மீள்வதற்கான முயற்சியாக, Vi நிறுவனம் ரூ.25,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.14,000 கோடி கடன் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் அரசுடைமை வங்கிகளின் கூட்டமைப்பில் உள்ளனர். எந்த வங்கிகளிடமிருந்தோ அல்லது வோடபோன் ஐடியாவிலிருந்தோ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், வோடபோன் ஐடியாவுக்கு ரூ. 14,000 கோடி கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொண்டதாக வங்கி விவகாரங்களை நன்கு அறிந்த நபர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்ததாக TNIE செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கடன் தவணை முறையில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கடன் மூலம் வரும் பணத்தை வைத்து 5G நெட்வொர்க்கை உருவாக்கவும், கூடுதல் நெட்வொர்க் டவர்களை வைக்கவும் Vi திட்டமிட்டுள்ளது. Vi தலைமை நிர்வாகி அக்ஷயா மூந்த்ரா சென்ற மாதம், கடன்களை வழங்குவதற்கு முன் பங்குகளை உயர்த்துவதற்கு வங்கிகள் விரும்பி உள்ளன. எனவே FPO முதலில் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் நீண்ட காலமாக வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தோம். அதில் அவர்கள் எங்களிடம் பங்குகளை முதலில் உயர்த்தும் படி கோரிக்கை வைத்தனர். எனவே நாங்களும் அவ்வாறே பங்குகளை உயர்த்தினோம். அதேபோன்று இப்போதும் நாங்கள் மீண்டும் வங்கிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம் என்று மே 17 அன்று vi தலைமை நிர்வாகி மூந்த்ரா ஆய்வாளர்களிடம் கூறியுள்ளார். vi நிறுவனத்தின் ஒட்டுமொத்த வங்கிக் கடன் ரூ. 40,000 கோடி என்ற நிலையில் இருந்தது. ஆனால் இப்பொது ரூ. 4000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2024ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், Vi நிறுவனம் அதிகரித்த இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, ரூ. 6,418.9 கோடியாக இருந்த நிகர இழப்பு, இந்த காலாண்டில் ரூ. 7,674 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், வருவாய் கடந்த ஆண்டின் ரூ. 10,531 கோடியில் இருந்து ரூ. 10,606 கோடியாக சிறிது உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பயனரிடம் இருந்து கிடைக்கும் வருவாயைக் காட்டும் ARPU மதிப்பு, கடந்த காலாண்டில் ரூ. 145 ஆக இருந்தது மற்றும் கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டின் ரூ. 135 ஆக இருந்த நிலையில், இந்த காலாண்டில் ரூ. 146 ஆக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications