தட்டி தூக்கிய எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. களைகட்டிய பங்கு விலை..!

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் துணை நிறுவனமான, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 47.5% அதிகரித்து, 389.77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 264.28 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தட்டி தூக்கிய எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. களைகட்டிய பங்கு விலை..!

இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 15,779.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 12,156.39 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கத்தக்கது.

இதே 2018 டிசம்பர் 31வுடன் முடிவடைந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஆண்டு இறுதியில் 1,34,150 கோடி ரூபாய் நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள் இருந்த நிலையில், 2019ம் ஆண்டின் இறுதியில் 1,64,190 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 891.52 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே இதன் மொத்த வருவாய் 38,167.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த ஒன்பது மாதங்களில் புதிய வணிகத்தின் மதிப்பு 1,650 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவிகிதம் அதிகமாகும்.

இதே 2019ம் நிதியாண்டில் புதிய வர்த்தக பிரிமியம் 35% அதிகரித்து 9,470 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2020ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 12,790 கோடி ரூபாயாக இந்த பிரிமியம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்த இந்த பிரிமிய விகிதமானது, 2020ம் நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் 22.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் நிகரலாபம் லாபத்தில் அறிவிக்கப்பட்டிருந்திருந்தாலும், பிஎஸ்இயில் 1.55 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 980.82 ரூபாயாக வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது. இதே என்எஸ்இயில் 4.25 ரூபாய் வீழ்ச்சி கண்டு 985.95 ரூபாயாகவும் ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+