எஸ்பிஐ-யின் ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ்.. யாருக்கு பொருந்தும்.. எப்படி இணைவது..!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் குழந்தைகளுக்கென தனியாக ஒரு முதலீட்டினை தொடங்க வேண்டும். அவர்களது கல்வி, திருமண எதிர்காலம் என்பது மிக நன்றாக இருக்க வேண்டும் என்பதே பல பெற்றோரின் முதல் கனவு.

அப்படியானவர்களில் பலரும் தேர்தெடுப்பது குழந்தைகளுக்கான முதலீட்டு திட்டங்களைத் தான். பலர் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக உள்ள இன்சூரன்ஸ் திட்டங்களிலும் முதலீடு செய்கின்றனர்.

அதிலும் இன்று இருக்கும் நெருக்கடியான காலகட்டங்களில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை போல, குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது. அவர்களுக்கு கோடிக் கணக்கில் சொத்து சேர்க்காவிட்டாலும், நல்லதொரு கல்வியை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் அவர்களது தலைமுறையை பார்த்துக் கொள்வார்கள் என்பது தான் பலரின் எண்ணமும்.

யார் யார் எடுக்கலாம்?

யார் யார் எடுக்கலாம்?

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி தான். இந்த திட்டத்தில் 0 முதல் 13 வயது வரையிலும், 21 வயது முதல் 50 வரையிலும் இரு திட்டங்களில் இணைந்து கொள்ளலாம். இதன் முதிர்வு காலம் 70 வருடம். இதில் குறைந்தபட்சம் வருட பிரீமியம் 6000 ரூபாயாகும்.

க்ளைம் எவ்வளவு?

க்ளைம் எவ்வளவு?

இந்த திட்டத்தில் மினிமம் 1 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 1 கோடி வரையிலும் முதிர்வு தொகையாக கிடைக்கும். இது உங்களது பிரீமிய தொகையினை பொறுத்து இருக்கும். இந்த பிரீமிய தொகையினை மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை செலுத்திக் கொள்ளலாம்.

சரண்டர் செய்ய முடியுமா?

சரண்டர் செய்ய முடியுமா?

இந்த பாலிசிக்கு ரைடர் பாலிசி என்றும் எதுவும் கிடையாது. பாலிசியை சரண்டர் செய்ய வேண்டுமெனில் மூன்று வருடம் கழித்து செய்துக் கொள்ளலாம். உங்களது பாலிசிக்கான பிரீமியத்தினை செலுத்த வேண்டிய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அதனை செலுத்த தவறினால், பாலிசி லாப்ஸ் ஆகிவிடும்.

பாலிசிக்கு எதிராக கடன்

பாலிசிக்கு எதிராக கடன்

இந்த பாலிசிக்கு எதிராக கடன் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வேளை பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக பாலிசி தொடங்கி ஒரு வருடத்திற்குள்ளாக தற்கொலை செய்து கொண்டால், செலுத்தப்பட்ட பிரீமியத்தில் இருந்து 80% நாமினியிடம் கொடுக்கப்படும், அப்படி இல்லாவிட்டால் சரண்டர் மதிப்பில் எது அதிகமாக உள்ளதோ அது நாமினினுக்கு செலுத்தப்பட்டு பாலிசி டெர்மினேட் செய்யப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+