ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் இவ்வங்கி சில முக்கிய கடன் காலத்திற்கு, வழங்கப்பட்டும் MCLR வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்கள் கூடுதலான வட்டியை தங்களுடைய ஈஎம்ஐ வாயிலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
எஸ்பிஐ இணையதளத்தின் தகவல்படி, இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஜூலை 15, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த உயர்வு காரணமாக, கார் கடன், வீட்டுக் கடன் போன்ற பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் வட்டி அதிகரித்து, இது கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ தொகையை அதிகரிக்கக் கூடும்.

கடந்த ஜூன் மாதத்திலும், எஸ்பிஐ சில கடன் கால கட்டங்களுக்கான MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2024 நிலவரப்படி எஸ்பிஐ கடன் வட்டி விகிதங்கள் ஒரு மாத கால MCLR அடிப்படை விகிதம் 5 புள்ளிகள் உயர்ந்து 8.35% ஆகவும், மூன்று மாத கால MCLR அடிப்படை விகிதம் 10 புள்ளிகள் உயர்ந்து 8.40% ஆகவும் அதிகரித்துள்ளன.
ஆறு மாதம், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால கட்டங்களுக்கான MCLR விகிதங்கள் 10 புள்ளிகள் உயர்ந்து முறையே 8.75%, 8.85%, 8.95% ஆக உள்ளன. இதேபோல் மூன்று வருட கால MCLR விகிதம் 5 புள்ளிகள் உயர்ந்து 9% ஆக உள்ளது.
| கடன் காலம் | தற்போதைய MCLR விகிதம் | மாற்றப்பட்ட MCLR விகிதம் |
| ஒரு இரவுக்கானது | 8.1 | 8.1 |
| ஒரு மாதம் | 8.3 | 8.35 |
| மூன்று மாதம் | 8.3 | 8.4 |
| ஆறு மாதம் | 8.65 | 8.75 |
| ஒரு வருடம் | 8.75 | 8.85 |
| இரண்டு ஆண்டுகளுக்கு | 8.85 | 8.95 |
| மூன்று வருடங்கள் | 8.95 | 9 |
MCLR என்றால் என்ன?: MCLR (Marginal Cost of Funds based Lending Rate) என்பது வங்கிகள் கடன் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வட்டி விகிதம் தான் இந்த MCLR. இதனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க எந்த வங்கிகளுக்கும் அனுமதி இல்லை.
எஸ்பிஐ EBLR என்றால் என்ன? SBI External Benchmark Lending Rate (EBLR) விகிதம் மாற்றமின்றி 9.15% + CRP + BSP ஆகவே உள்ளது. அனைத்து வீட்டுக் கடன்களும் இந்த EBLR விகிதத்தோடு இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.50% முதல் 9.65% வரை மாறுபடும்.


Click it and Unblock the Notifications