இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.72% பங்குகளை ரூ.672 கோடிக்கு வாங்கியுள்ளது. ஜூன் 25 அன்று 1.6 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.420 விலையில் எஸ்பிஐ பிளாக் டீல் மூலம் வாங்கியதன் மூலம் நடைபெற்றது.
பொதுவாக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பெரும் முதலீட்டாளர்களான எல்ஐசி, எஸ்பிஐ-யின் முதலீடுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த முதலீட்டு சிறு முதலீட்டாளர்களையும் ஈர்க்கும், இதேபோல் இந்நிறுவனங்களின் மீதான நம்பிக்கை என்பது அதிகரிக்கும்.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்கு விலை: இந்நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தக முடிவில் 1.60 சதவீதம் சரிந்து 423.20 ரூபாயாக உள்ளது. கடந்த 5 நாட்களில் 1.62 சதவீதம் குறைந்துள்ளது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் முதலீடு: எஸ்பிஐ MF, இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மதிப்பு கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் முதன்முறையாக குறிப்பிடத்தக்க முதலீடு செய்துள்ளது.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு பங்கு உரிமை அறிக்கையின்படி, எஸ்பிஐ எவ்விதமான பங்குகளையும் வைத்திருக்கவில்லை அல்லது 1%-ஐ விட குறைவாக இருந்திருக்கலாம். இதற்கு காரணம் ஸ்டார் ஹெஸ்த் தனது முக்கிய பங்குதாரர்கள் பட்டியலில் எஸ்பிஐ MF பெயரை சேர்க்கவில்லை.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்: இந்த நிறுவனம் மறைந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெரும் முதலீட்டில் இயங்கி வருகிறது. தற்போது இந்த முதலீடு அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
மார்ச் காலாண்டு பங்கு உரிமை அறிக்கையின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 14.1% பங்குகளையும், அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா 3.04% பங்குகளையும் வைத்துள்ளனர். மற்றொரு ப்ரோமோட்டரான சேஃப்க்ராப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா LLP, 40.29% பங்குகளை வைத்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஆதிக்கம்: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் ஒட்டுமொத்த பங்கு முதலீட்டின் அளவு மார்ச் காலாண்டில் 9.45% ஆக இருந்தது. எஸ்பிஐ முதலீட்டின் மூலம் இது 12 சதவீத அளவீட்டை தொட்டு இருக்கலாம்.
தற்போது எஸ்பிஐ MF 2.72% பங்குகளை வாங்கியிருக்கும் வேளையில், மார்ச் காலாண்டு முடிவில் HDFC டிரஸ்டி 3.97% பங்குகளையும், ICICI ப்ரூடென்ஷியல் ஃபார்மா ஹெல்த்கேர் ஃபண்ட் 4.8% பங்குகளையும் வைத்துள்ளன. மேலும், ICICI ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் 4.7% பங்குகளை வைத்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு தாக்கம்
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் இந்த முதலீடு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் மதிப்பை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆனாஸ் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து சரிவிலேயே உள்ளது. இதன் சந்தை மதிப்பை பார்த்தால் 24,880 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications