இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து அதிகப்படியான லாபத்தை பெற்று வரும் வேளையில் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளும் புதிய உற்சாகத்துடன் இயங்கி வருகிறது. டிஜிட்டல் சேவை முதல் பலவற்றில் தனியார் வங்கிகளுக்கு இணையாக போட்டிபோட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பெரும் பொதுத்துறை வங்கியாக இருக்கும் எஸ்பிஐ புதிதாக ஒரு ஹோம்லோன் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இது பல புதிய கட்டுமான நிறுவனங்களுக்கும், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும் ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது.

மத்திய அரசு கிரீன் எனர்ஜிக்கு பெரிய அளவில் ஊக்குவிப்பு அளித்து வரும் வேளையிலும், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தும் வேளையிலும் ஒவ்வொரு வீட்டிலும் சோலார் முக்கிய தேவையாக உள்ளது. இப்படியிருக்கும் வேளையில் எஸ்பிஐ ஹோம் லோன் உடன் சோலார் திட்டத்தையும் இணைத்து புதிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் ஹோம் லோன் வர்த்தகம் மட்டுமே 6.3 லட்சம் கோடி ரூபாய், இதில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மனி KfW போன்ற பல வெளிநாட்டு அமைப்புகளிடம் பெற்ற கடன்கள் 2.3 பில்லியன் டாலராகும். இப்படியிருக்கையில் எஸ்பிஐ வங்கியின் நீண்ட கால climate action funds கீழ் அளிக்கப்படும் ஹோம் லோன்களுக்கு இத்தகைய புதிய சேவையை அளிக்க உள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ ரிஸ்க் பிரிவு உயர் அதிகாரி அஷ்வினி குமார் கூறுகையில் எங்களுடைய கிரீன் பண்ட்ஸ் பிரிவில் இருந்து கடன் பெற வேண்டுமாயின் பில்டர்கள் கட்டாயம் rooftop solar அமைக்க வேண்டும் என தெரிவித்தார். வரும் காலத்தில் இதை தனி பன்டில் ஆஃபராக வழங்க திட்டமிட்டு உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த வீட்டுக்கடன் திட்டங்கள் 10 முதல் 20 வருட கடன்களாக இருக்கும் என தெரிகிறது. இந்த கிரீன் பண்ட் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ பசுமை கட்டிடங்கள், பேட்டரி ரீசைக்கிள், rooftop solar ஆகியவற்றுக்கும் கடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications