இந்தியாவின் முன்னணி வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன் வர்த்தகப் பிரிவில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளும் அதிகளவிலான வீட்டுக்கடன் அளித்து வரும் நிலையில் வங்கிகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போட்டி மிகவும் அதிகம்.
இதற்கிடையிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டு கடன் சேவை பிரிவில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது. மேலும் 2024ஆம் நிதியாண்டுக்குள் இப்பிரிவு வர்த்தகத்தை 7 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் எனப் புதிய இலக்கையும் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.
5 மடங்கு வளர்ச்சி
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் ஹவுசிங் வர்த்தகப் பிரிவு கடந்த 10 வருடத்தில் கிட்டத்தட்ட 5 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு இப்பிரிவு வர்த்தகம் வெறும் 89,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2021ஆம் நிதியாண்டில் இதன் அளவு 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கொரோனா நேரம்
கொரோனா காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட போதிலும், எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது வங்கியின் சிறப்பான திட்டமிடலை காட்டுகிறது.
ஹோம் லோன் பிரிவு
2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஹோம் லோன் பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. சக போட்டி வங்கிகளை விடவும் அதிகமான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பாகப் புதிய கடனுக்கான நிதி பங்கீடு மற்றும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை அடைந்தது.
மிஸ்டு கால் சேவை
மேலும் ஹோம் லோன் பிரிவு வர்த்தகத்தை மேம்படுத்த ஸ்டேட் பாங்க் இந்தியா வீட்டு கடன் குறித்து விபரங்களை அறிய வாடிக்கையாளர்களுக்கு எளிதாகத் தகவல் அளிக்கும் விதமாக மிஸ்டு கால் சேவை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி 7208933140 என்ற மொபைல் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வீட்டு கடன் குறித்த விபரங்களை எளிதாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications