4 முறை தட்டினால், பணம் கொடுத்தா..? எஸ்பிஐ வங்கியில் புதிய சேவை வந்திருக்காம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் YONO-வில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கும், எளிதாக நிதி சேவைகளை வழங்குவதற்கும் RTXC அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Carbon Border Tax-ஐ எதிர்த்த இந்தியா.. COP27 கூட்டத்தில் நடந்தது என்ன..? Carbon Border Tax-ஐ எதிர்த்த இந்தியா.. COP27 கூட்டத்தில் நடந்தது என்ன..?

குவிக் லோன் சேவை

குவிக் லோன் சேவை

இந்தியாவில் குவிக் டெலிவரி சேவை போலவே குவிக் லோன் சேவை பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. தற்போது இந்திய வங்கிகளில் ரீடைல் லோன் சேவை மிகவும் முக்கியக் கடனாக மாற்றியுள்ளதால் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் இதில் அதிகப்படியான முக்கியதுவத்தை அளித்து வருகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வேகமாகவும், உடனடியாகக் கடன் அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதன்மையான தனிநபர் கடன் திட்டமாக இதை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் கிரெடிட் திட்டம் எஸ்பிஐ வங்கியின் பர்சனல் லோன் பிரிவின் டிஜிட்டல் அவதாரமாக விளங்குகிறது.

RTXC திட்டம்

RTXC திட்டம்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டில் இருந்த பிடியே YONO செயலி வாயிலாக RTXC திட்டம் மூலம் முற்றிலும் காகிதமற்ற மற்றும் டிஜிட்டல் முறையின் கீழ் கடன் பெறலாம். RTXC திட்டம் End to End 8-படி செயல்முறையில் கீழ் ஒருவர் விரைவாகவும் எளிமையாகவும் கடன் பெற முடியும் என்பது தான் இத்திட்டத்தின் தனிச் சிறப்பு.

வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை

வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் இனி தனிநபர் கடன்களுக்காக வங்கிகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, YONO-வில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி) திட்டம் மூலம் வீட்டில் இருந்த படியே சில கிளிக்களில் கடன்களைப் பெற முடியும்.

இந்தத் தேவை மாத சம்பளக்காரர்களுக்கு மட்டும் தான்.

டிஜிட்டல் வங்கி சேவை

டிஜிட்டல் வங்கி சேவை

டிஜிட்டல் வங்கி சேவை பெரிய அளவில் மேம்பட்டு உள்ள நிலையிலும், மக்களுக்கு மிகவும் அவசியமாக மாறியுள்ள நிலையிலும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் தனியார் வங்கிகளுக்குப் போட்டியாகத் தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.

செப்டம்பர் காலாண்டு முடிவுகள்

செப்டம்பர் காலாண்டு முடிவுகள்

எஸ்பிஐ செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா -வின் லாபம் 74 சதவீதம் உயர்ந்து ரூ.13, 265 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.7,627 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.77,689.09 கோடியாக இருந்த மொத்த வருவாய் மதிப்பாய்வு, இக்காலாண்டில் ரூ.88,734 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்தச் செயல்படாத சொத்துக்கள்

மொத்தச் செயல்படாத சொத்துக்கள்

இந்திய வங்கியின் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு 4.90 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் 30, 2023 வரையில் முடிந்த காலாண்டில் மொத்தச் செயல்படாத சொத்துக்களின் (NPAs) அளவு 3.52 சதவீதமாகக் குறைந்துள்ளது மூலம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, 2023 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 14,752 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒருங்கிணைந்த நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி எஸ்பிஐ முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI new personal loan service Real Time Xpress Credit in YONO APP; just 4 clicks get money instantly

SBI new personal loan service Real Time Xpress Credit in YONO APP; just 4 clicks get money instantly
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X