ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கென பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லி உதான் என்ற இரு சேமிப்புக் கணக்கை (Pehla Kadam and Pehli Udaan savings account) குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முழுமையான தயாரிப்புகளின் பூங்கொத்துகள் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது எஸ்.பி.ஐ.
சிறப்பு சலுகை
அப்படி என்ன இந்த திட்டத்தில் சிறப்பு சலுகை என்று கேட்கிறீர்களா? இந்த சிறப்பு வங்கிக் கணக்கு மூலம், வங்கி கனக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை என்பது தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் பணத்தை வாங்கும் திறன், இது தவிர புகைப்படம் பொறிக்கப்பட்ட ஏடிஎம் கம் டெபிட்கார்டு, ஆட்டோ ஸ்வீப் வசதி மற்றும் இணைய வங்கி வசதி உள்ளிட்ட பல வசதிகள் இந்த குழந்தைகளுக்குகான சேமிப்பு கணக்கில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
யாரெல்லாம் தகுதி
சரி இந்த வங்கி கணக்கை யாரெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும். யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள். பெஹ்லா கதம் (Pehla Kadam) மைனர் வயதுடைய யார் வேண்டுமானலும், தங்களது பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் கூட்டாக திறக்க முடியும். இதே பெஹ்லி உதான் கணக்கை 10 வயதிற்கு மேற்பட்ட மைனரின் ஒரே பெயரில் இதை திறக்க முடியும். இவர்கள் ஒரே மாதிரியாக கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பணப் பரிமாற்றம் எப்படி?
சரி எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த இரண்டு சேமிப்பு கணக்குகள் மூலம் தினசரி 5000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். இதே இணைய வங்கி அல்லது மொபைல் வங்கியில் 2000 ரூபாய் வரை பில் செலுத்திக் கொள்ளலாமாம். இது தவிர டிடி எடுத்துக் கொள்ளுதல், இ-டெர்ம் டெபாசிட் வைப்புத் தொகையும் செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
வட்டி எவ்வளவு?
இதே வட்டி விகிதத்தை பொறுத்த வரை பெஹ்லா கதம் மற்றும் பெஹில் உதான் கணக்குகளில் ஒரு லட்சத்திற்கு கீழ் டெபாசிட் செய்யும் தொகைக்கு, வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் என்றும், இதே 1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் போது 3 சதவிகித வட்டியும் கிடைக்குமாம்.
ஏடிஎம் கம் டெபிட் கார்டு
பெஹ்லா கதம் சேமிப்பு கணக்கிற்கு கொடுக்கப்படும் ஏடிஎம் கம் டெபிட் கார்டு தினசரி 5000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் அட்டையில் குழந்தையின் படம் பெறிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கணக்கு குழந்தையின் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயரில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே பெஹ்லி உதான் குழந்தையின் படம் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும், இது குழந்தையின் பெயரில் மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காசோலை உண்டு
இது தவிர காசசோலை வசதியும் உண்டாம். இந்த பெஹ்லா கதம் திட்டத்தில் 10 காசோலைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காசோலையில் குழந்தையின் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயர் ஆகியவை இருக்கும். இதே பெஹ்லி உதான் திட்டத்தில் 10 காசோலைகள் உடன் குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications