இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, அதிகரித்து வரும் பணவீக்கம், ருபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை தொடர்ந்து 5 முறை உயர்த்தியுள்ளது.
ஆர்பிஐ-யின் தொடர் வட்டி விகித உயர்வால் அனைத்து கடனுக்களுக்கமான வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில் புதிய வீடு, கார், பைக் வாங்குவோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பின்பு பெரும்பாலான வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கும் வேளையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டுக் கடன் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தள்ளுபடி வட்டி
அக்டோபர் 4, 2022 முதல் ஜனவரி 31, 2023 வரையிலான காலகட்டம் வரையில் 0.15 முதல் 0.30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வட்டியில் வீட்டுக் கடன் அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆர்பிஐ வட்டி விகித உயர்வால் சோகத்தில் மூழ்கிய மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எஸ்பிஐ வீட்டுக் கடன்
பொதுவாக எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கு 8.55 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறது. தற்போது அளிக்கப்பட்டு உள்ள வட்டி விகித தள்ளுபடி மூலம் மக்கள் குறைந்த வட்டியிலேயே கடனை வாங்க முடியும். மேலும் இந்தத் தள்ளுபடியைப் பெற சில கண்டிஷன்களை வைத்துள்ளது எஸ்பிஐ.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா holiday campaign offer பெயரில் இந்தத் தள்ளுபடியை அறிவித்துள்ளது, ஆனால் இந்தத் தள்ளுபடி சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் அளிக்கிறது எஸ்பிஐ. அதாவது 800 மற்றும் அதற்கு மேல் சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 8.40 சதவீத வட்டியில் இருந்து ஹோம் லோன் அளிக்கப்படுகிறது.
பெண்கள்
இதேபோல் பெண்கள் வீட்டுக் கடன் வாங்கினால் அதற்கும் 0.05 சதவீத வட்டி தள்ளுபடி உள்ளது, மேலும் 30 லட்சம் ரூபாய்க்கு குறைவான வீட்டுக் கடனுக்குக் கூடுதலான 0.10 சதவீத வட்டி தளர்வும் உள்ளது.


Click it and Unblock the Notifications