இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இந்திய வரலாற்றில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் செய்திடாத வகையில் QIP எனப்படும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
எஸ்பிஐ தற்போது திட்டமிட்டுள்ள படி சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அடுத்த வாரம் நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்க தயாராகி வருகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த விஷயத்தை அறிந்தவர்கள் ஈடி-க்கு தெரிவித்துள்ளனர்.

இந்த பங்கு விற்பனை வெற்றிகரமாக முடிந்தால், 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 22,560 கோடி ரூபாய் பங்கு விற்பனை சாதனையை முறியடிக்கப்பட்டு இந்தியாவின் மிகப்பெரிய QIP விற்பனையாக விளங்கும்.
எஸ்பிஐ-யின் இந்த மாபெரும் பங்கு விற்பனை முக்கியமான கட்டத்தில் நடக்கிறது. ஒருபக்கம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்து வருகிறது, இதேபோல் மக்களும் விலைவாசியை சமாளிக்க வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அதிகளவில் செலவு செய்து வருகின்றனர். மேலும் வட்டி விகிதம் குறைந்து வரும் காரணத்தால் வைப்பு நிதியும் குறைந்து வருகிறது. இதனால் எஸ்பிஐ வங்கிக்கான நிதி ஆதாரம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதேவேளையில் எஸ்பிஐ வங்கி தனியார் வங்கிகளுடன் பல பிரிவுகளில் போட்டிப்போட்டு வரும் வேளையில் அதிகப்படியான நிதி தேவை உள்ளது. இந்த நிலையில் வங்கியின் கடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், நிர்வாக தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட உள்ளது. எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மே மாதம் இந்த பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ வங்கியில் மத்திய அரசு சுமார் 57.59 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, இதை தொடர்ந்து எல்ஐசி 9.02 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு 2வது பெரிய பங்குதாரராக உள்ளது. எஸ்பிஐ வங்கி 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பங்குச் சந்தையை நிதி தேவைக்காக அணுகுகிறது. இந்த பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் 25000 கோடி ரூபாய் வங்கியின் மூலதனத்தை வலுப்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.
மேலும் எஸ்பிஐ நிர்வாகம் இந்த பங்கு விற்பனை இன்னும் இறுதி செய்யப்படவில்லை, திட்டத்தை மாற்றுவதற்கும் வாய்ப்பு அதிகமாகவே உளஅளது. இந்த 25000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளின் விற்பனையை நிர்வகிக்க, எஸ்பிஐ ஆறு முதலீட்டு வங்கிகளை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த 6 வங்கிகள் பட்டியலில் சிட்டிகுரூப் இன்க் மற்றும் எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் இந்திய கிளைகளும், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், கோடக் மஹிந்திரா முதலீட்டு வங்கி, மார்கன் ஸ்டான்லி, மற்றும் எஸ்பிஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக, எஸ்பிஐ நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2024-25 நிதியாண்டில், எஸ்பிஐயின் மொத்த சொத்து மதிப்பு 61 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது, இது இந்திய வங்கித்துறையில் அதன் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications