400 புதிய கிளைகள் திறக்க திட்டமிடும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI விரிவாக்க திட்டத்தில் புதிய அத்தியாயம் )
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் தனது வங்கி சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டில் 400 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், எஸ்பிஐ வங்கி சுமார் 137 புதிய கிளைகளைத் திறந்த நிலையில் இதில் 59 கிளைகள் கிராமப்புறங்களில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் யெஸ் வங்கி தனது வர்த்தகத்தை லாபகரமானதாக மாற்றவும், நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்கவும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதேபோல் தனியார் வங்கிகள் மட்டும் அல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் டிஜிட்டல் சேவைகளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வங்கி கிளைகளின் அவசியம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதற்கு எஸ்பிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் குமார் காரா PTI செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 89 சதவீதமும் மற்றும் பிற பரிவர்த்தனைகளில் 98 சதவீதமும் கிளைக்கு வெளியே நடக்கும் போது, கிளை தேவையா என்று யாரோ என்னிடம் கேட்டார்கள். அதற்கு என் பதில் ஆம். புதிய வாய்ப்புகள் தோன்றுவதால் கிளைகள் இன்றும் அவசியமானதாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதில் குறிப்பாக அட்வைசரி சேவைகள் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகள் போன்ற சில முக்கிய சேவைகளை கிளையில் இருந்து மட்டுமே வழங்க முடியும் என்று தினேஷ் குமார் காரா செய்தியாளர்களிடம் கூறினார்.
எஸ்பிஐ வங்கிக்கான வளர்ச்சி வாய்ப்பு இருக்கும் இடங்களை நாங்கள் கண்டறிந்து வருகிறோம், இந்த இடங்களை உறுதி செய்த பின்னர் கிளைகளைத் திறக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு சுமார் 400 கிளைகளை எங்கள் வங்கி நெட்வொர்க்கில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
மார்ச் 2024 நிலவரப்படி, எஸ்பிஐ இந்தியா முழுவதும் சுமார் 22,542 கிளைகளைக் கொண்ட வலுவான வங்கி நெட்வொர்க்-ஐ கொண்டுள்ளது. இதில் புதிதாக 400 கிளைகள் சேர்க்கப்பட்டு உள்ள காரணத்தால் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் வங்கி வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போகுக்கு இது முக்கியமான விஷயமாக உள்ளது.
400 புதிய கிளைகள் மற்றும் ஓய்வுபெறும் வங்கி அதிகாரிகள் ஆகியோரை கணக்கிட்டால் அடித்த 1-2 வருடத்தில் 6000 முதல் 8000 வேலைவாய்ப்புகள் எஸ்பிஐ வங்கியில் உருவாக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications