நம் நாட்டில் வங்கித் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் ஏராளம். அவர்கள் அனைவருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) போன்ற பெரிய வங்கிகளில் வேலை செய்வது ஒரு பெருமையாகவும், பாதுகாப்பான எதிர்காலமாகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, SBI-யில் Probationary Officer (PO) ஆக பணியாற்றுவது இளைஞர்கள் விரும்பும் உயர் பதவிகளில் ஒன்றாகும்.
இப்பதவியின் மூலம் ஒருவருக்கு நல்ல சம்பளம் மட்டும் இல்லை, பதவி உயர்வு வாய்ப்புகள், வசதிகள், ஓய்வூதியம் போன்ற பல நன்மைகளும் உண்டு. தற்போது, மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்கும் திட்டத்தில் இருக்கிறது.

SBI-யில் Probationary Officer ஆக சேர்ந்தவுடன் ஒருவருக்கு ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.41,960 வழங்கப்படுகிறது. அடிப்படை சம்பளத்தை தாண்டில் பல்வேறு கூடுதல் சலுகைகளும் உள்ளன. அகவிலைப்படி (DA) - இது லிவிங் காஸ்ட்-க்கு ஏற்ப மத்திய அறசு மாற்றி அமைக்கும் விதிகளின் படி கூடுதல் சம்பளம் கிடைக்கும். மேலும் House rent allowance (HRA), பணியாளர் வசிக்கும் நகரத்தின் அடிப்படையில் 7% முதல் 9% வரை வழங்கப்படுகிறது. Special Allowance, இது ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருக்கும்.
சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள், பயணச் செலவுகள், விடுமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இதையெல்லாம் சேர்த்தால், ஒரு SBI POவின் மாத சம்பளம் ரூ.52,000 முதல் ரூ.55,000 வரை இருக்கும். இந்த ஊதியம், தனியார் துறையிலும் மிகப்பெரிய வங்கிகளில் வழங்கப்படும் சம்பளத்தை விட அதிகம்.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) என்பது ஊதியத்தில் ஏற்கனவே உள்ள அடிப்படை சம்பளத்தை பெருக்கி புதிய சம்பளத்தை கணக்கிடும் ஒரு முக்கிய காரணி. 7வது ஊதியக் குழுவில் இந்த ஃபேக்டர் 2.57 ஆக இருந்தது. அதனால், மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,000 இருந்தது, அதை ரூ.18,000 ஆக உயர்த்தினர். இப்போது மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அமைக்க உள்ளது. இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.86 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்படுத்தும் மாற்றம் மிகப்பெரியது.
SBI POவின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.41,960. இதனை 2.86-ஆல் பெருக்கினால், புதிய அடிப்படை சம்பளம் சுமார் ரூ.1,19,000 வரை உயரலாம். ஆனால் இது முழு சம்பளம் அல்ல, மற்ற பேமண்ட்ஸ் சேர்க்கப்படுவதற்கு முன்பு இது அடிப்படை சம்பளம்.
அதாவது, 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, SBI POவின் கையில் கிடைக்கும் மாத சம்பளம் ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை செல்லலாம் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இது தற்போதைய சம்பளத்தை விட ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை கூடுதல் ஆகும்.
இந்த மாதிரியான சம்பள உயர்வு, வங்கி ஊழியர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தற்போது வேலை செய்பவர்களுக்கும், வேலைக்கான தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கும் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. ஏனெனில், இந்த வேலை நிச்சயமானதோடு, உயர்ந்த சம்பளத்தையும் தருகிறது.
ஒரு Probationary Officer, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் Assistant Manager ஆக உயரலாம். அதன் பிறகு Deputy Manager, Manager, Chief Manager, Assistant General Manager, Deputy General Manager, General Manager என பதவி உயர்வு பெறலாம். அதோடு சிலருக்கு வெளிநாட்டு கிளைகளில் வேலை செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மற்ற சிறப்புகள் என்னவென்றால், வங்கி quarters வசதி (வீடு), கார் வசதி , குழந்தைகளின் கல்விக்காக கல்வி உதவித்தொகை, சிறப்பு மருத்துவக் காப்பீடு, வாழ்நாள் ஓய்வூதியம், விடுமுறை கால பயண பேமண்ட்ஸ்கள் ஆகியவை அடங்கும்.
மொத்தத்தில் பார்க்கும்போது, SBI-யில் Probationary Officer வேலை என்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். இது உயர்ந்த சம்பளம், நிச்சயமான வேலை, அரசு பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகளைக் கொண்டது. தற்போது 8வது சம்பள கமிஷன் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இந்த வேலை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாறும். மாத சம்பளமாக ரூ.70,000 வரை கிடைக்கும் வாய்ப்பு, இளைஞர்கள் இந்த வேலைக்கு தயார் செய்ய ஒரு ஊக்கமாக இருக்கும். இந்த காரணங்களால், வங்கித் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள், SBI PO வேலைக்கு தயாராகலாம். இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு முக்கியமான படியாக அமையும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications