பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் வரி சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் என எங்கு வேண்டுமானாலும் PPF திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதிவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் PPF திட்டத்தில் 2500 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.
தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக முதலீடு செய்யலாம். ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பாத முதலீட்டாளர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையிலும் கணக்கு திறக்கலாம். ஆன்லைனில் முதலீடு செய்ய எஸ்பிஐ-யின் மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தலாம்.

மாதம் ரூ.2500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: PPF திட்டத்தின் விதிமுறைகள், போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் ஒன்றுதான். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இந்த திட்டத்தில் 2500 ரூபாய் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் ஒரு வருடத்திற்கு 30,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.4,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக ரூ.3,63,642 கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.8,13,642 ஆக இருக்கும்.
தகுதி: 18 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் SBI வழங்கும் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். 18 வயது வரை சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் வழங்கப்படும். 18 வயதை எட்டியதும் PPF திட்டத்தின் வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.
PPF திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ஒரு நிதியாண்டுக்கு 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். மாதம் 2500 ரூபாய்க்கு பதிலாக உங்களால் இயன்ற தொகையையும் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும். இது 15 ஆண்டுகால திட்டம் என்பதால், 15 ஆண்டுகள் கழித்து எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள், PPF திட்டத்தின் தற்போதைய வட்டி போன்றவற்றை வழங்கினால் முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்று தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications