இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக இந்திய வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனைகள் குறைந்து சொத்துக்களின் திறன் மேம்பட்டு உள்ள காரணத்தாலும், வட்டி விகிதம் உயர்வின் மூலம் லாப அளவுகள் அதிகரித்துள்ளதாலும் ஜூன் காலாண்டில் எஸ்பிஐ வங்கி லாபம் கிட்டதட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் லாபம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 178.24 சதவீதம் உயர்ந்து 16,884 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இக்காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வட்டி வருமானம் 24.7 சதவீதம் உயர்ந்து 38,905 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் மொத்த வட்டி மார்ஜின் 3.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூன் காலாண்டில் மொத்த வாராக் கடன் சொத்துக்களின் அளவு காலாண்டு அடிப்படையில் 2.78 சதவீதத்தில் இருந்து 2.76 சதவீதமாக குறைந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் 3.9 சதவீதமாக உள்ளது. ரூபாய் மதிப்பில் பார்க்கும் போது எஸ்பிஐ வாராக் கடன் சொத்து 113,271.72 கோடி ரூபாயில் இருந்து 91,327.84 கோடி ரூபாயாக உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் கடன் அளவு 13.90 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்துள்ளது, இந்த உயர்வுக்கு முக்கிய காராணம் SME பிரிவு கடனில் பதிவான 18.27 சதவீத வளர்ச்சியும், ரிடைல் தனிநபர் கடனில் பதிவான 16.46 சதவீத வளர்ச்சி தான்.
எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் தொகை 12.00 சதவீதமும், CASA Deposit அதாவது கரன்ட் அக்கவுன்ட் மற்றும் சேமிப்பு கணக்கின் டெபாசிட் தொகை 5.57 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications