இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாத காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கி சுமார் 14,330 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்றுள்ளது.
இதேபோல் எஸ்பிஐ வங்கியின் மொத்த வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 39500 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற்றுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 26.4 சதவீதம் உயர்ந்து 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தள்ளது.

ஒதுக்கீடுகள், தற்காலிக செலவுகள் மற்றும் மொத்த கடன் ஒத்திவைப்பு அளவு கடந்த ஆண்டில் 3,039 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 115.28 கோடி ரூபாயாக குறைத்துள்ளது எஸ்பிஐ. இதோடு வாராக் கடனுக்காக செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டு 2011 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 1,815 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மொத்த வாராக் கடன் சொத்துக்களின் அளவு செப்டம்பர் மாத இறுதியில் 2.55 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3.52 சதவீதமாகவும், கடந்த காலாண்டில் 2.76 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகர வாராக் கடன் சொத்துக்களின் அளவு செப்டம்பர் காலாண்டில் 0.64 சதவீதமாக குறைந்துள்ளது.
இக்காலாண்டின் முடிவில் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் காஸ்ட் அளவு 6 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 0.22 சதவீதம் உயர்ந்துள்ளதை அதன் காலாண்டு முடிவுகளில் வெளியிட்டு உள்ளது. கடன் அளவு வருடாந்திர அடிப்படையில் 12.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் கடன் வர்த்தகம் SME பிரிவில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது, ரீடைல் லோன் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கார்பரேட் லோன் 7 சதவீதமும், விவசாய கடன் 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடைசியாகவும், மிகவும் முக்கியமானதாகவும், CASA எனப்படும் கரன்ட் அக்கவுன்ட் மற்றும் சேமிப்பு கணக்கில் டெபாசிட் தொகை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எஸ்பிஐ வங்கி பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து 578.15 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications