SBI கொடுத்த ஷாக்.. லாபத்தில் 35 சதவீதம் சரிவு.. என்ன காரணம்..?!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று எஸ்பிஐ வங்கி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டிசம்பர் காலாண்டில் சுமார் ரூ.9,164 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டில் 14,205.34 கோடியாக இருந்த நிலையில் சுமார் 35% குறைந்த அளவீட்டை தற்போது பதிவு செய்துள்ளது.

SBI கொடுத்த ஷாக்.. லாபத்தில் 35 சதவீதம் சரிவு.. என்ன காரணம்..?!

லாபத்தில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கியக் காரணம் ஒரு முறை விதிவிலக்குச் செலவுகள் கீழ் 7100 கோடி ரூபாயைச் சேர்ந்துள்ளது தான்.

டிசம்பர் காலாண்டில் எஸ்பிஐ வங்கி ரூ.105,733.78 கோடியை வட்டி வருமானமாக ஈட்டியுள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் ரூ.86,616.04 கோடியை வட்டி வருமானமாகப் பெற்றிருந்த நிலையில் தற்போது 22 சதவீத வருடாந்திர உயர்வைப் பதிவு செய்துள்ளது.

எஸ்பிஐ வங்கி சுமார் 66,918 கோடி ரூபாயை வட்டியாகப் பணத்தைச் செலுத்திய நிலையில், இதன் மூலம் என்ஐஐ என அழைக்கப்படும் net interest income 38,816 கோடி ரூபாயாக உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 4.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் டிசம்பர் காலாண்டில் ஆப்ரேட்டிங் லாபமாக 20,336 கோடி ரூபாயை பெற்றுள்ளது, நிகர லாபம் 9,164 கோடி ரூபாயாக உள்ளது. இது எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி வரம்பு அளவு 1 அடிப்படை புள்ளிகள் மட்டும் குறைந்து 3.28 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு வர்த்தகத்தில் கிடைக்கும் நிகர வட்டி வரம்பு 8 அடிப்படை புள்ளிகள் குறைந்து 3.41 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 31 உடன் முடிந்த நிதியாண்டில் நிகர லாபம் 40,378 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 33,538 கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் 20.40 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இதோடு எஸ்பிஐ வங்கியின் ரிட்டன் ஆஃப் அசர்ட் விகிதம் டிசம்பர் காலாண்டில் 0.62 சதவீதமும், 9 மாதத்தில் 0.94 சதவீதமாகவும் உள்ளது. இதேபோல் ரிட்டன்ஸ் ஆஃப் ஈக்விட்டி 19.47 சதவீதமாக உள்ளது.

வங்கியின் கடன் அளவு வருடாந்திர அடிப்படையில் 14.38 சதவீதமும், டெபாசிட் விகிதம் 13.0 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகள் (GNPA) விகிதம் 2.42% ஆக உள்ளது, இது வருடாந்திர அடிப்படையில் 72 அடிப்படை புள்ளிகள் மேம்பட்டு உள்ளது. நிகர NPA விகிதம் 0.64% ஆகவும் வருடாந்திர அடிப்படையில் 13 அடிப்படை புள்ளிகள் மேம்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+