இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. மார்ச் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் ரூ.20,698 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q4FY23) அறிவிக்கப்பட்ட ரூ.16,694 கோடியுடன் ஒப்பிடும் போது 24% அதிகமாகும்.
மேலும், வங்கியின் நிர்வாகக் குழு எஸ்பிஐ முதலீட்டாளர்களின் மனம் குளிரும் வரையில் ஒரு பங்கிற்கு 13.70 ரூபாய் அளவிலான டிவிடெண்ட் தொகையை வழங்க பரிந்துரைத்துள்ளது. இந்த ஈவுத்தொகையை பெற தகுதியான நபர்களை தீர்மானிப்பதற்கான பதிவு நாள் மே 22, 2024 ஆகும். டிவிடெண்ட் தொகை தகுதிபெற்ற முதலீட்டாளர்களுக்கு ஜூன் 5, 2024 அன்று வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q4FY23) ரூ.92,951 கோடியாக இருந்த வட்டி வருவாய், இந்த காலாண்டில் (Q4FY24) 19% உயர்ந்து ரூ.1,11,043 கோடியாக உள்ளது.
நிகர வட்டி வருமானம் (Net Interest Income - NII): எஸ்பிஐ வங்கி மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர வாராக் கடன் சொத்துகளின் அளவு வருடாந்திர அடிப்படையில் 7 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 3 சதவீதம் குறைந்து ரூ.84,276 கோடியாக உள்ளது. இதேபோல் மொத்த வாராக் கடன் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 2% குறைந்து ரூ.21,051 கோடியாக உள்ளது.
இதேபோல் இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.28,748 கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.24,588 கோடியாக இருந்தது மூலம் 17% உயர்வை பதிவு செய்துள்ளது.
மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர வாராக் கடன் சொத்துகக்ல அளவு வருடாந்திர அடிப்படையில் 7 சதவீதமும், காலாண்டு அடிப்படையில் 3 சதவீதம் குறைந்து ரூ.84,276 கோடியாக உள்ளது. இதேபோல் மொத்த வாராக் கடன் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 2% குறைந்து ரூ.21,051 கோடியாக உள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வைப்பு நிதி மார்ச் காலாண்டில் ரூ.49,16,077 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 11% அதிகமாகும் டிசம்பர் காலாண்டை விட 3% அதிகமாகும். உள்நாட்டு நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கின் டெபாசிட் தொகை 19,41,996 கோடி ரூபாயாக உள்ளது, டெர்ம் டெபாசிட் தொகை 27,82,340 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications