நாட்டின் மிகப்பெரிய வங்கியாகவும், அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டு யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மார்ச் 2023 காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வியக்க வைக்கும் லாபத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
மார்ச் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 83 சதவீதம் உயர்ந்து 16,694.51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என வியாழனன்று தெரிவித்துள்ளது.

ஜனவரி-மார்ச் 2023 இல் அதன் நிகர வட்டி வருமானம் மட்டுமே 40,392.50 கோடி ரூபாயாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் மார்ச் காலாண்டு 31,197 கோடி ரூபாய் உடன் ஒப்பிடுகையில் சுமார் 29.5 சதவீதம் அதிகமாகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக குழு 2023ஆம் ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 11.30 ரூபாய் அளிக்க பரிந்துரை செய்துள்ளது. எஸ்பிஐ பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி ஜூன் 14, 2023 அன்று இந்த 11.30 ரூபாய் ஈவுத்தொகை பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும்.
2022-23 முழு நிதியாண்டில் மொத்தமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிகர லாபம் 59 சதவீதம் உயர்ந்து 50,232.45 கோடி ரூபாயாக உள்ளது.
மார்ச் 2023 காலாண்டில் எஸ்பிஐ-யின் சொத்துத் தரம் உயர்ந்துள்ளது பங்கு முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் (GNPA) அக்டோபர் - டிசம்பர் 2022 காலாண்டில் 98.347 கோடி ரூபாயாக இருந்த நிலையில் மார்ச் காலாண்டில் 90,927.8 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதத்திஸ் 8427.8 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன் குறைந்துள்ளது.
ஜனவரி-மார்ச் 2023 இல் எஸ்பிஐ வங்கியின் மொத்த NPA விகிதம் 2.78 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது கடந்த காலாண்டில் 3.14 சதவீதமாக இருந்தது. அதன் நிகர NPA விகிதமும் டிசம்பர் 2022 காலாண்டில் 0.77 சதவீதத்திலிருந்து 0.67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மார்ச் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் சொத்துக்கள் மீதான வருமானம் 0.96 சதவீதமும், பங்குகள் மீதான முதலீட்டுக்கு 19.43 சதவீத வருமானமும் பெறுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கி பங்குகள் 1.77 சதவீத சரிவுடன் 574.15 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications