இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதேவேளையில் இந்த நேற்று SBI வங்கி MCLR விகிதத்தை 5 அடிப்படைப்புள்ளிகள் குறைந்துள்ளது. இவ்விரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
இந்திய மக்களின் கனவு வீட்டை எட்டிப்பிடிக்க வீட்டுக் கடன் எந்த அளவுக்கு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆர்பிஐ வட்டி விகிதங்களை படிப்படியாக குறைத்துள்ள வேளையில் எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வட்டி விகிதம் எல்லோருக்கும் பொருந்தாது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த புதிய உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் குறிப்பாக கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள விண்ணப்பதாரர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகித அளவின் மேல் மட்டத்தை உயர்த்தியுள்ளதாக .
இதனால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும் நபர்களுக்கு அதிகப்படியான வட்டி விகிதம் விதிக்கப்படும் என்பதால் இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் நபர்களுக்கு இதனால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.
இதேபோல் யூனியன் வங்கியும் தனது வீட்டுக் கடன் விகிதங்களை உயர்த்தியுள்ளது, இதனால் பிற பொதுத்துறை வங்கிகளும் இதேப்போன்ற நிலையை பின்பற்றலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜூலை மாதம் இறுதி வாரத்தில், SBI-யின் கடன் விகிதங்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதம் வரை இருந்த நிலையில், தற்போது புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு 7.5 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதேபோல், யூனியன் வங்கி தனது விகிதத்தை 7.35 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
தற்போதைய சூழலில், தனியார் வங்கிகளான HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் Axis வங்கி ஆகியவை தங்களது வீட்டுக் கடன் விகிதங்களை முறையே 7.90 சதவீதம், 8 சதவீதம் மற்றும் 8.35 சதவீதத்தில் தொடங்குகின்றன.
இந்த வட்டி விகிதங்கள், பொதுத்துறை வங்கிகளின் புதிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது சிறிது மாறுபடுகின்றன. இந்த வட்டி விகித உயர்வு, கடன் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு புதிய கடன் வாங்குபவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம், இதனால் அவர்கள் தங்கள் நிதி திட்டங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்.
MCLR விகிதம்:
நேற்று வெளியான அறிவிப்பில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து காலக்கெடுக்கான MCLR வட்டி விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த புதி வட்டி விகிதம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
வீட்டுக் கடன் பிரிவில் அப்பர் லிமிட் மட்டுமே எஸ்பிஐ உயர்த்தியுள்ளது, MCLR விகிதம் மூலம் இதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் வட்டி குறையும்.
SBI மற்றும் யூனியன் வங்கியின் இந்த நடவடிக்கை, வீட்டுக் கடன் சந்தையில் ஒரு புதிய போக்கை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான கடன் மதிப்பெண்ணுடன் உள்ளவர்களுக்கு கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். மேலும், பிற பொதுத்துறை வங்கிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications