இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெள்ளிக்கிழமை முதல் MCLR விகிதத்தை உயர்த்தியுள்ளது, இதன் காரணமாக வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐ பெரும் தொகையை டாலராக வாங்க முடிவு செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கி தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான நிதியைப் பல வழிகளில் இருந்து திரட்டும், உதாரணமாக மக்களிடம் பெரும் வைப்பு நிதி, ஆர்பிஐ-யிடம் இருந்து கடன், பத்திர விற்பனை மூலம் நிதி திரட்டல், வெளிநாட்டு வங்கிகள் அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெரும். இந்த கடனை எந்த இடத்தில் குறைவான வட்டியில் கிடைக்கிறதோ, அதை தேர்வு செய்து கடன் பெறுவது வழக்கம்.

இந்த சூழ்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் மக்களின் வைப்பு நிதியின் வளர்ச்சி மெல்ல மெல்ல குறைந்து வரும் வேளையில், வெளியில் இருந்து நிதியை திரட்ட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது பெரிய அளவில் தொகையை வெளிநாட்டில் இருந்து டாலர் கடனாக திரட்ட தயாராகி வருகிறது.
இந்த ஆண்டில் எந்தொரு வங்கியும் திரட்டிடாத வகையில் மிகப்பெரிய டாலர் மதிப்பிலான கடனை எஸ்டேட் பேங்க் திரட்ட திட்டமிட்டுள்ளது. CTBC Bank, HSBC Holdings Plc மற்றும் Taipei Fubon Bank ஆகிய வங்கிகளிடம் இருந்து மொத்தமாக 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐந்தாண்டு கடனை பெற உள்ளது.
இந்த 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை Secured Overnight Financing Rate (SOFR) க்கு மேல் 0.925 சதவீதம் அளவிலான வட்டி விகிதத்தில் பெற உள்ளது. இந்த பணத்தை எஸ்பிஐ வங்கி, குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (GIFT City) இல் உள்ள SBI கிளையின் மூலம் தனது வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
பொதுவாக இந்தியாவில் NBFC நிறுவனங்கள் தான் அதிகளவில் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கடனை திரட்டும். ஆனால் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து மிகப்பெரிய தொகையை கடனாக பெற்றுள்ளது.
இதேபோல் எஸ்பிஐ வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவது இது முதல் முறையல்ல, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கூட SBI 750 மில்லியன் டாலர் கடனை மூன்று ஆண்டு காலத்திற்கு திரட்டியது.


Click it and Unblock the Notifications