இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ தனது கிளைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அதிகமான பணியாளர்களை தேர்வு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி துறையில் வேலை தேடுபவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு.
12000 பணி நியமனங்கள்: 2027-ஆம் நிதியாண்டில் கிளர்க் மற்றும் ஆபிஸர் பணியிடங்களுக்கு சுமார் 11,000 முதல் 12,000 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் சி.எஸ் செட்டி கூறியுள்ளார். தற்போது பணிபுரிந்து வரும் பணியாளர்களின் ஓய்வுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் காரணமாக 2027-ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 12000 நபர்கள் வங்கி வேலையில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை அறிவிக்கப்பட்டிருக்கும் காலி பணியிடங்களை காட்டிலும் கடந்த முறை எஸ்பிஐ அதிக அளவிலான ஊழியர்களை பணியமர்த்தியது. டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களுக்கு அதிக அளவிலான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சுமார் 25,633 பேர் "டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட்" பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நடப்பு நிதியாண்டில் அதிக ஆள்சேர்ப்பு தேவையில்லை என்பதால் அறிவிக்கப்பட்டிருக்கும் பணியிடங்களும் சற்று குறைவாகவே உள்ளது. பணி நியமனங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் புதிய வங்கி கிளைகளை திறக்கவும் எஸ்பிஐ திட்டமிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வரும் நிதியாண்டில் 200 முதல் 250 புதிய sbi கிளைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து இந்த புதிய கிளைகள் திறக்கப்படவுள்ளது. ஒரு சில கிளைகளில் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்யவும் புதிய கிளைகளை திறந்து வங்கியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
2026-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வரும் முக்கிய வங்கியாக எஸ்பிஐ திகழ்கிறது. சுமார் 2.45 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் பொது துறை வங்கிகளில் sbi வங்கியும் ஒன்று. வங்கி துறையில் கால் பதிக்க விரும்பும் நபராக இருந்தால் இந்த பணி நியமன அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

