தொடர்ந்து 8வது முறை வட்டி குறைத்த எஸ்பிஐ.. மக்களுக்கு லாபம்..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதோடு இப்புதிய வட்டி குறைப்பு டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம்.

இந்த வட்டி குறைப்பின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கார் லோன், ஹோம் லோன் மற்றும் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் குறையும். இப்புதிய வட்டி குறைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியின் MCLR விகிதம் 8.00 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்புடன் எஸ்பிஐ தொடர்ந்து 8 முறை எம்சிஎல்ஆர் விகிதத்தைக் குறைத்துள்ளது.

மலிவான கடன்

மலிவான கடன்

இந்த 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பின் மூலம் நாட்டிலேயே மிகவும் மலிவான வட்டியில் கடன் கொடுக்கும் வங்கி என்ற பெயரை மீண்டும் எஸ்பிஐ பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்தது. இந்தப் பலன் வாடிக்கையாளராகிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொருட்டும், எஸ்பிஐ தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்த வட்டியைக் குறைத்துள்ளது.

25 சதவீத சந்தை

25 சதவீத சந்தை

இந்தியாவில் ஹோம் லோன் மற்றும் ஆட்டோ லோன் பிரிவில் எஸ்பிஐ வங்கி மட்டும் சுமார் 25 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இப்பிரிவில் பல முன்னணி வங்கிகள் போட்டி போட்டும் பெரிய அளவிலான வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. ஆனால் எஸ்பிஐ வங்கி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை காரணமாக இப்பிரிவு வர்த்தகத்தில் எஸ்பிஐ வலிமையாக உள்ளது.

ஒரு வருட காலம்

ஒரு வருட காலம்

இப்புதிய வட்டி விகிதத்தின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அதேபோல் MCLR விகிதத்திற்கு ஒரு வருட காலம் இருக்கும் காரணத்தால் புதிதாகக் கடன் வாங்குவோருக்கும் இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும். மேலும் MCLR விகிதம் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் இந்த இப்புதிய வட்டி விகிதம் தளர்வு பொருந்தும்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 137 அடிப்படை புள்ளிகள் குறைந்து வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கி

ஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கி

சொத்து, வைப்பு நிதி, வங்கி கிளைகளின் எண்ணிக்கை, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்குகிறது ஸ்டேட் பாங்க் இந்தியா. இதேபோல் அடமான கடனிலும் எஸ்பிஐ வங்கி மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+