ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அக்டோபர் 15 முதல் நவம்பர் 15, 2024 வரையிலான கடன்களுக்கான MCLR விகிதத்தை ரிவைஸ் செய்து அறிவித்துள்ளது. SBI ஒரே ஒரு காலகட்டத்திற்கான கடன்களுக்கு மட்டும் MCLR வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. மற்ற விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. மேலும் திருத்தப்பட்ட MCLR விகிதங்கள் அக்டோபர் 15, 2024 முதல் அமலுக்கு வர உள்ளது.
SBI வங்கியின் MCLR வட்டி விகிதங்கள்: MCLR அடிப்படையிலான வட்டி விகிதங்கள் 8.20 சதவீதம் முதல் 9.1 சதவீதத்திற்குள் இருக்கும்படி திருத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் பெறக்கூடிய கடன்களுக்குக்கான MCLR விகிதம் 8.20 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் ஒரு மாதத்திற்கான MCLR விகிதம் 8.45 சதவீதத்திலிருந்து 8.20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 25 bps குறைந்துள்ளது. 6 மாத கடன்களுக்கான வட்டி விகிதம் 8.85 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 வருட MCLR விகிதம் 8.95 சதவீதமாகவும், 2 வருட MCLR விகிதம் 9.05 சதவீதமாகவும், 3 வருட MCLR விகிதம் 9.1 சதவீதமாகவும் உள்ளது.

MCLR என்றால் என்ன?: MLCR என்பது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான லெண்டிங் ரேட். இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட வட்டி விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்படும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன் வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். வங்கிகள் இதற்கு குறைவான வட்டிக்கு கடன் தர முடியாது.
SBI அடிப்படை விகிதம்: SBI அடிப்படை விகிதம் செப்டம்பர் 15, 2024 முதல் 10.40% ஆக உள்ளது.
SBI BPLR: பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட் (பிபிஎல்ஆர்) செப்டம்பர் 15, 2024 முதல் ஆண்டுக்கு 15.15% ஆக உள்ளது
SBI EBLR: SBI EBLR விகிதம் 9.15 சதவீதமாக உள்ளது. வீட்டுக் கடன்களில், கடன் பெறுபவரின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதங்கள் 8.50% முதல் 9.65% வரை மாறுபடும்.
SBI ஹோம் லோன் இணையதளத்தின்படி, பெஞ்ச்மார்க் விகிதத்தில் (REPO) மாற்றம் ஏற்பட்டால், வீடு கடன் தொடர்பான வட்டி விகிதமும் மாறுபடும். ரெப்போ விகிதம் அதிகரித்தால், வீட்டு கடன் வட்டி விகிதமும் அதிகரிக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications