டெல்லி: இந்தியாவின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவிலான மாற்று திறனாளிகளை கடந்த நிதியாண்டில் பணியமர்த்தியுள்ளன.
நிஃப்டி 50 நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளில், 75% பேர் இந்த 5 நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு
2022ம் நிதியாண்டின் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி 50 நிறுவனங்களில் 12,295 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் டாப் நிறுவனங்களில் மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் நிப்டி 50 நிறுவனங்களில் 10.6% அதிகரித்துள்ளது.

அரை சதவீதம்
எனினும் நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கையில் அரை சதவீதத்திற்கும் கீழாகவே மாற்று திறனாளிகள் உள்ளனர்.
உதாரணத்திற்கு எஸ்பிஐ-யில் 2,44,250 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 5096 பேர் மாற்று திறனாளிகள் ஆகும்.

எத்தனை மாற்று திறனாளிகள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,42,982 பேராகும். இதில் மாற்று திறனாளிகள் 1410 பேராகும். இதே டிசிஎஸ் நிறுவனத்தில் 2000 மாற்று திறனாளிகளும், விப்ரோவில் 697 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கட்டமைப்பு தான் பிரச்சனை
இன்றைய காலகட்டத்தில் டெக், சில்லறை மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் என பலவும், மாற்று திறனாளிகளை பணியமர்த்த தொடங்கி விட்டன.
எனினும் அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.

வீட்டில் இருந்து பணி
எனினும் பற்பல நிறுவனங்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இது இனி வரும் காலக்கட்டத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக ஸ்டாலின் திட்டம்
இதற்கிடையில் டிசம்பர் 3ம் தேதியன்று உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஏதுவாக மடிக்கணினிகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் பரிசீலனை செய்து தமிழக அரசுடன் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவார்கள் என அறிவித்தார். இது மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பினை அதிகரிக்க வாய்ப்பாக அமையலாம். இது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டால் பலரும் பலனடைய ஏதுவாக அமையலாம்.