நாட்டின் பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1.1% வீழ்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி விகிதமானது முன்பு 5% ஆகவும், அதன் பின்னர் 4.1% ஆகவும் குறைத்தும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் மடமடவென அதிகரித்து வரும் இந்த நிலையில், தற்போது மீண்டும் 1.1% ஆக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம்
உலகம் முழுக்க 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தில் எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமோ என்ற பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார இழப்பு அதிகரிக்கும்
எஸ்பிஐ அறிக்கையின் படி, நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பதன் மூலம் 21.1 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம் அல்லது பெயரளவு மொத்த மதிப்பு (nominal Gross Value) 6% அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மே 3 வரை சில கட்டுப்பாடுகள் தளர்த்தல் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் மே 3 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமினல் ஜிடிபி
ஏப்ரல் 20க்கு பின்பு சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்ற நிலையில், 2021ம் நிதியாண்டிலும் வளர்ச்சியில் வீழ்ச்சி காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 12.1 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதே இந்த 2021ம் நிதியாண்டில் நாமினல் ஜிடிபி விகிதம் 4.2% ஆக குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையான ஜிடிபி விகிதம்
ஆக நாமினல் ஜிடிபி 4.2% ஆக எடுத்துக் கொண்டால், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.1% ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த லாக்டவுன் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள துறைகளில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு இழப்பு
PLFS survey 2017-18 அறிக்கையின் படி, 373 மில்லியன் தொழிலாளர்கள் சுயதொழில் செய்பவர்களாக உள்ளனர். வழக்கமான மற்றும் சாதாரண தொழிலாளர்கள் சுயதொழில் 52%மும், சாதாரண தொழிலாளி 25%மும், மீதமுள்ளவர்கள் வழக்கமான ஊதியம் பெறுபவர்களாகவும் உள்ளனர். இந்த இந்த நிலையில் பூட்டுதல் காரணமாக இந்த தொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பினை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு இழப்பா?
ஆக மொத்தம் இந்த லாக்டவுன் முழுமைக்கும் 4.05 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே எந்தவொரு நிதிச்சலுகை அளிப்பதாக இருந்தாலும், குறைந்தபட்சம் 4 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பினை ஈடு செய்யும் அளவுக்கு, ஈடு செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் எஸ்பிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications