பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட எஸ்பிஐ.. நெருக்கடியிலும் லாபம் 52% அதிகரிப்பு..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அதன் படி, கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் நிகரலாபம் 52 சதவீதம் அதிகரித்து, 4.574.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3,011.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே காலாண்டு அடிப்படையில் ஒப்பிடும்போது 9 சதவீதம் அதிகரித்துள்ளது கடந்த ஜூன் காலாண்டில் 4,189.3 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது.

கணிப்பை விட குறைவு தான்

கணிப்பை விட குறைவு தான்

இது நிபுணர்களின் கணிப்பு படி 4,676.5 கோடி ரூபாயாக லாபம் காணலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், கொரோனாவின் காரணமாக இதன் லாபம் குறைந்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

இதுவே வரிக்கு முந்தைய லாபம் 6,341.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டினை விட 25.33% அதிகரித்து காணப்படுவதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 14.3% அதிகமாகும்.

செயல்பாட்டு லாபம்

செயல்பாட்டு லாபம்

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 12% அதிகரித்து, 16,460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 14,714 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இதே இந்த கடன் வழங்குனரின் நிகர வட்டி வருவாய் - கடன்களின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி வருவாய் மற்றும் டெபாசிட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட வட்டி வருவாய்க்கு, இடையே உள்ள விகிதம் 28,182 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டில் 24,600 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஜூன் காலாண்டில் 26,641 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதே உள்நாட்டு நிகர வட்டி மார்ஜின் தொகையானது 3.34% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 12bps அதிகரித்துள்ளது.

மொத்த செயல்படாத சொத்து மதிப்பு

மொத்த செயல்படாத சொத்து மதிப்பு

இதே வங்கியின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 1.25 டிரில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 1.29 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த மொத்தம் செயல்படாத சொத்துகளின் மதிப்பானது 5.28% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 5.44% ஆக இருந்தது.

வாரக்கடன் சரிவு

வாரக்கடன் சரிவு


இதுவே நிகர வாரக்கடன் மதிப்பானது 36,450.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 42,703.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த விகிதம் 1.86%ல் இருந்து 1.59% ஆக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலை 1.12% ஏற்றம் கண்டு 207.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+