இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான வங்கிகள் ஏடிஎம் சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனை கட்டணம் மற்றும் இலவச பயன்பாட்டு வரம்புகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டணம் குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் சில பயன்பாட்டு வரம்புகளை நிர்ணயித்துள்ளது. இலவச வரம்பை மீறி ஏடிஎம் பயன்படுத்தினால் நீங்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

திருத்தப்பட்ட விகிதங்கள்: அனைத்து ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களும் மெட்ரோ அல்லது மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் 5 இலவச பரிவர்த்தனை வரை மேற்கொள்ளலாம். பிற வங்கி ஏடிஎம்-களில் 10 இலவச பரிவர்த்தனை வரை செய்யலாம். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையிலான ஆவரேஜ் மந்த்லி பேலன்ஸ்-ஐ பராமரிக்கும் வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறை பணம் எடுக்க முடியும்.
அதேபோல ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் இதே விதி தான் பொருந்தும். இதற்கு மேல் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 1 லட்சத்திற்கு மேல் ஆவெரேஜ் மந்த்லி பேலன்ஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
ஏடிஎம் சர்வீஸ் சார்ஜ்: நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி ஏடிஎம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மாத மாதம் சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்படும். இந்த சார்ஜ், குறிப்பிட்ட வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்களைப் பயன்படுத்துகிறாரா? அல்லது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்துகிறாரா? என்பதைப் பொறுத்தது. இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான மாதாந்திர வரம்பை பயன்படுத்திவிட்டால் அதன் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
ஒரு வேலை மற்ற ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் அதிகமாக இருக்கும். பெரு நகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பிற ஏடிஎம்களை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது ரூ. 21 + ஜிஎஸ்டி விதிக்கப்படும். பேலன்ஸ் சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைகளைப் பெற எஸ்பிஐ ஏடிஎம்-களில் எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது. ஆனால் நீங்கள் இதை மற்ற வங்கி ஏடிஎம்களில் செய்தால் ஒவ்வொரு ரெக்வஸ்ட்டுக்கும் 10 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஒருவேளை உங்களிடம் போதிய பேலன்ஸ் இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் ரூ.20 + ஜிஎஸ்டி விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications