பிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. எஸ்பிஐ தான் பெஸ்ட் சாய்ஸ்.. வட்டி விகிதம் எவ்வளவு..!

இன்றைய காலகட்டத்தில் பலவகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலும் மக்கள் விரும்புவது வங்கி டெபாசிட்டுகளைத் தான். வட்டியே குறைவாக இருந்தாலும், பாதுகாப்பானது என்பதால் விரும்பப்படுகிறது.

அந்த வகையில் இன்று நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை தான் பார்க்க இருக்கிறோம். இந்த வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை எவ்வளவு என்று பார்க்க இருக்கிறோம். இந்த வட்டி விகிதமானது கடைசியாக கடந்த ஜனவரி 8 அன்று மாற்றப்பட்டது.

எஸ்பிஐ-யில் 2 கோடி ரூபாய்க்குள், எந்த காலத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்? வாருங்கள் பார்க்கலாம்.

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு

வங்கிகளின் வங்கி வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், இது பாதுகாப்பான அதே சமயம் ரெகுலரான வருவாயினைக் கொடுக்கும். இதனால் பாதுகாப்பான முதலீடாக இந்த எஃப்டிக்கள் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு முதலீடும் பாதுகாப்பில்லாததாகத் தான் கருதப்படுகிறது. சில முதலீடுகள் முதலீட்டிற்கே பங்கம் விளைவிக்கும் நிலையில், குறைவான வட்டியானாலும், மக்களுக்கு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிப்பில்லை

சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிப்பில்லை

அதோடு மற்ற முதலீடுகளைப் போல் சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. அதோடு இந்த பிக்ஸட் டெபாசிட்டுகளை எளிதில் புதுபிக்கலாம் என்பதால், இது மக்களுக்கு ஏற்ற எளிதான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது. இதனால் இது மூத்த குடிமக்களுக்கு ஏதுவான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையி;ல் வட்டி விகிதம் - 2.90%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 3.9%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.40%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 5.4%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்


7 நாட்கள் முதல் - 45 நாட்கள் வரையி;ல் வட்டி விகிதம் - 3.4%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு - 4.4%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில்- 4.90%
211 நாட்கள் முதல் 1 வருடத்துக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு- 4.90%
1 வருடம் முதல் 2 வருடத்துக்குள் - 5.50%
2 வருடம் முதல் 3 வருடத்துக்குள் - 5.6%
3 வருடம் முதல் 5 வருடத்துக்குள் - 5.8%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 6.2%

எஸ்பிஐ-யின் மூத்த குடிமக்களுக்காக சிறப்பான எஃப்டி திட்டமான வீகேர் திட்டம் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+