ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் மூன்றாவது பெரிய கடன் வழங்குனராக உள்ளது. இதன் சந்தை மதிப்பானது முதன் முறையாக 5 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது.
இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 22% ஏற்றம் கண்ட பிறகு இந்த அளவுக்கு சந்தை மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது.
இந்த பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.3% ஏற்றம் கண்டு, 564.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த 5 அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த கால கட்டத்தில் மட்டும் 6% ஏற்றம் கண்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி & ஐசிஐசிஐ வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் உள்ளிட்ட வங்கிகள் முன்னதாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆப் இந்தியா மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவை இந்த பட்டியலில் உள்ளன.
7வது இடத்தில் எஸ்பிஐ
எஸ்பிஐ இப்போது ஏழாவது மிக மதிப்புமிக்க இந்திய நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனமாக இருந்து வருகின்றது. அதனை தொடர்ந்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.
வங்கி பங்குகள் ஏற்றம்
கடந்த சில அமர்வுகளாகவே கடனுக்கான தேவை அதிகரித்து வரும் இந்த சூழலில், வங்கி பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. பேங்க் நிஃப்டியின் மதிப்பானது 2% ஏற்றம் கண்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி பங்கு விலை 5% ஏற்றமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 3% ஏற்றமும், ஆக்ஸிஸ் வங்கி 7.5% ஏற்றமும் அதிகரித்துள்ளது.
கடன் வளர்ச்சி
ரிசர்வ் வங்கி தரவின் படி, இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சியானது 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு 15.5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்ட் 26 நிலவரப் படி வெளியில் உள்ள நிலுவை கடன் மதிப்பு 124.30 ட்ரில்லியன் ரூபாயாகும். ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில் 6 டிரில்லியன் டாலர் ரூபாய் கடன் கொடுத்துள்ளன. கடனுக்கான தேவையானது அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக கார்ப்பரேட் கடன் தேவையானது பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் எஸ்பிஐ மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
வளர்ச்சி அதிகரிக்கும்
தேவையானது அடுத்த நிதியாண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்பிஐ முக்கிய பங்கு வகிக்கலாம். சில்லறை கடன் வளர்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எஸ்பிஐ இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications