SBI வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் வரையில் இந்த சலுகையை பெற முடியும்..!

பிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இது ஒரு கணிசமான வருவாயினைக் கொடுக்கும், பாதுகாப்பான முதலீடாக இந்த எஃப்டிக்கள் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு முதலீடும் பாதுகாப்பில்லாததாகத் தான் கருதப்படுகிறது. சில முதலீடுகள் முதலீட்டிற்கே பங்கம் விளைவிக்கும் நிலையில், குறைவான வட்டியானாலும், மக்களுக்கு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடிமக்கள் என்றால் வேறு ஆப்சனே தேவையில்லை.

அதோடு மற்ற முதலீடுகளைப் போல் சந்தை ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படாது. மேலும் இந்த டெபாசிட் திட்டங்களில் மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனால் இது மூத்த குடிமக்களுக்கு ஏதுவான பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ-யின் வீகேர்

எஸ்பிஐ-யின் வீகேர்

சேமிப்பு என்பது நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று என்றாலும், அது மூத்த குடி மக்கள் வாழ்வில் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே மூத்த குடி மக்களுக்கான மிக மிக பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை வங்கிகளும், அரசும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ மூத்த குடி மக்களுக்காக அறிமுகப்படுத்திய சிறப்பான ஒரு சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டம் தான் வீகேர்.

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ-யின் வீகேர்

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ-யின் வீகேர்

கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக வயதானவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆக மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வீகேர் சீனியர் சிட்டிசன்ஸ் டெர்ம் டெபாசிட் ஸ்கீம் என்ற சிறப்பு நிலையான வைப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

வீகேரில் யாரெல்லாம் இணையலாம்?

வீகேரில் யாரெல்லாம் இணையலாம்?

எஸ்பிஐ-யின் வீகேர் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணைந்து பயன்பெறலாம். இருப்பினும், இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்துக்கான முதிர்வு காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் ஆகும்.

கூடுதல் வட்டி விகிதம்

கூடுதல் வட்டி விகிதம்

மற்ற சேமிப்புத் திட்டங்களை விட இத்திட்டத்தின் கீழ் 0.8% அதிகமான வட்டி கிடைக்கும். அதாவது சாதாரண பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை விட, மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம். இதே வீகேர் சிறப்பு திட்டத்தின் மூலம் இணையும் மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் கிடைக்கும். ஆக மொத்தத்தில் இந்த திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது 80 அடிப்படை புள்ளிகள் அதிகம்.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

எஸ்பிஐ தற்போது பொதுமக்களுக்கு 2 கோடி ரூபாய்க்குள்ளான முதலீடுகளுக்கு, 2.9% முதல் 5.4% வரை வட்டியினை வழங்கி வருகின்றது. ஆனால் இந்த சிறப்பு வீகேர் எஃப்டி திட்டம் மூலம் 6.20% வரையில் வட்டியினை வழங்கி வருகின்றது. இந்த திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை ஜூன் 30 வரையில் இவ்வங்கி நீட்டித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+