பணத்தை எவ்வாறு சேமிப்பது, வளர்ப்பது என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கும் ஒன்று தான். பங்குச்சந்தையில் நேரடி முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு, அதன் நன்மைகளை மறைமுகமாக அனுபவிக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதுவே SIP முதலீடுகள். SIP முதலீடுகள் கூட்டு வட்டி முறையில் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொட்டி குவிக்கின்றன . இதனால் மாதம் மாதம் செய்யும் சிறு பங்களிப்பும் கூட பெரிய லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பெற்று தரும். இந்தப் பதிவில் அப்படிப்பட்ட ஒரு ஃபண்ட் விவரங்களைப் பற்றி தான் பார்க்க உள்ளோம்.
இந்தியாவின் மிகப்பெரிய அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளில் ஒன்று SBI மியூச்சுவல் ஃபண்ட். இது பல மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. அவற்றில் பல வருடாந்திர SIP வருமானத்தின் (XIRR) அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டுரையில், முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்படும் SBI SIP மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 மற்றும் ரூ. 20,000 என்ற தொகையை SIP முறையில் 5 ஆண்டுகளாக முதலீடு செய்தால், எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை காண்போம்.
SBI PSU மியூச்சுவல் ஃபண்ட்: இந்த மியூச்சுவல் ஃபண்ட், 5 ஆண்டு முதலீட்டு காலத்தில் 41.50 சதவீத வருடாந்திர SIP வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஃபண்டின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு (AUM) ரூ. 3,071 கோடி. அதன் NAV ரூ. 35.72 ஆகும்.
ஜனவரி 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஃபண்ட், தொடக்கத்திலிருந்து 13.36 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. PSU ஃபண்டின் செலவு விகிதம் (Expense Ratio) 0.82 சதவீதம்.
இந்த SBI PSU மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம். அதே சமயம் ஃபண்டில் மொத்தத் தொகையாக முதலீடு செய்ய நினைத்தால், அதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.5,000 ஆகும்.
இந்த ஃபண்ட் அதன் 89.91 சதவீத முதலீடுகளை ஈக்விட்டிகளில் கொண்டுள்ளது. அவற்றில் 44.15 சதவீதம் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் உள்ளது.
5 ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர SIP முதலீடு செய்திருந்தாலோ அல்லது மொத்தமாக ரூ.6 லட்சம் முதலீடு செய்திருந்தாலோ, 5 ஆண்டு காலத்தில் அவை ரூ.16.37 லட்சமாக மாறி இருக்கும்.
அதே போல, 5 ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.20,000 மாதாந்திர SIP முதலீடு செய்திருந்தாலோ அல்லது மொத்தமாக ரூ. 12 லட்சம் முதலீடு செய்திருந்தாலோ, 5 ஆண்டு காலத்தில் அவை ரூ.32.74 லட்சமாக மாறி இருக்கும்.
ஆனால் ஃபண்டின் கடந்த கால செயல்திறனை வைத்து இனிவரும் காலங்களிலும் அவை அதே அளவிலான செயல் திறனை வழங்கும் என்று சொல்லிவிட முடியாது. எனவே எந்த ஒரு முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறவும். அதன் பின் சுய விருப்பத்துடன் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications