நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI). சமீபத்தில் SBI செயலிழந்த வங்கிக் கணக்குகளை மீண்டும் இயங்க வைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. செயல்படாத வங்கிக் கணக்குகளை செயல்பட வைக்க கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பதிவில் செயல்படாத வங்கி கணக்குகளை ஆக்டிவேட் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு வங்கி கணக்கு எப்போது செயல்படாத கணக்காக கருதப்படும்?: 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேமிப்பு அல்லது நடப்பு வங்கிக் கணக்கில் எந்தவித பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அவை செயலிழந்ததாகக் கருதப்படும். செயல்படாத வங்கி கணக்குகளை குறைக்கும் விதமாக நவம்பர் 30-ஆம் தேதி அன்று எஸ்பிஐ ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது.

பொதுவாக செயல்படாத வங்கி கணக்குகளை வைத்து தான் மோசடி சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. தேவையை மீறி 2, 3 வங்கிக் கணக்குகளை வைத்திருந்தாலோ, அவற்றை சரிவர பராமரிக்கவில்லை என்றாலோ பிற்காலத்தில் சிக்கல் ஏற்படலாம். எஸ்பிஐ கணக்கு செயலிழந்தால் டெபிட் பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிவர்த்தனைகள், செக் டெபாசிட், புதிய டெபிட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது.
ஆர்பிஐ வங்கிகளுக்கென்று சில விதிமுறைகளை அவ்வப்போது வெளியிடும். அப்படி செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் படி ஜனவரி 1-ஆம் தேதி அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வங்கிகளில் செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஈமெயில் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும்.
செயல்படாத SBI வங்கி கணக்குகளை செயல்படுத்துவது எப்படி?:
ஸ்டெப் 1: செயல்படாத வங்கி கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் சமீபத்திய கேஒய்சி ஆவணங்களுடன் அருகில் உள்ள SBI கிளைக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: கேஒய்சி சமர்ப்பிப்புடன் கணக்கை செயல்படுத்துவதற்கான கோரிக்கையை வாடிக்கையாளர் தெரிவிக்க வேண்டும்.
ஸ்டெப் 3: வாடிக்கையாளர் சமர்ப்பித்த கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையில் வங்கி கிளை கணக்கை செயல்படுத்தும். மேலும் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்களுக்கு SMS அல்லது மெயில் மூலமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
கணக்கு செயல்படுவதற்கு நீங்கள் கோரிக்கை வைத்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும். மொபைல் பேங்கிங் மூலமாகவும் KYC அப்டேட் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, டிரைவிங் லைசென்ஸ் ,ஆதார் கார்டு போன்ற விவரங்களும் இதற்கு தேவைப்படும்.


Click it and Unblock the Notifications