இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. OnlineSBI இணையதளம் மற்றும் YONO Lite மொபைல் செயலியில் செயல்பட்டு வந்த mCASH என்ற உடனடிப் பணப் பரிவர்த்தனை சேவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி பிறகு முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் இனி mCASH சேவையை பயன்படுத்தி பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்பதை தெளிவாக கூறியுள்ளது.
mCASH என்றால் என்ன..?: mCASH சேவை என்பது, பணம் அனுப்ப வேண்டிய நபரின் வங்கிக் கணக்கு விவரங்களையோ அல்லது IFSC குறியீட்டையோ தெரிந்து கொள்ளாமலேயே, அவர்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாக எளிதில் பணம் அனுப்பும் ஒரு வசதி ஆகும். இந்தப் பணத்தைப் பெறும் நபர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமல்லாமல் வேறு எந்த வங்கியிலும் கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்பு மற்றும் கடவுச்சொல் (Passcode) மூலம் பணத்தைத் தங்களது கணக்குக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள முடிந்தது.

mCASH நிறுத்த என்ன காரணம்..?: தற்போது இந்தப் பழமையான சேவை நிறுத்தப்படுவதாக SBI அறிவித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள தகவலில், வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே UPI, IMPS, NEFT, RTGS போன்ற பல நவீன மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை வழிகள் இருப்பதால், அதற்குப் பதிலாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்தச் சேவையை வங்கி நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
மாற்று வழிகளைப் பயன்படுத்த SBI வங்கி அறிவுரை : mCASH சேவை நிறுத்தப்பட்டாலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், 3ஆம் தரப்பு நபர்களுக்குப் பணம் அனுப்பவும், பெறவும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI (ஜிபே, ஃபோன்பே), IMPS (உடனடிப் பரிமாற்றம்), NEFT (ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிமாற்றம்), மற்றும் RTGS (பெரிய தொகைப் பரிமாற்றம்) போன்ற வேறு பல வழிகள் உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வழிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்பதால், வாடிக்கையாளர்கள் இனி இந்தப் பணப் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. mCASH சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த மாற்று வழிகளுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications