நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வங்கி சேவைகளை அதிகரிக்க நடப்பு நிதியாண்டில் சுமார் 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க முயற்சித்து வருகிறது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காகவும், தனது டிஜிட்டல் சேனல்களின் பயன்பாட்டை அதிகரிக்க முதலீடு செய்துள்ளது.
மார்ச் மாதம் 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296-ஆக உள்ளது. இதில், கடந்த நிதியாண்டின் இறுதியில் 1,10,116 அதிகாரிகள் வங்கியின் பட்டியலில் இருந்தனர். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

"தொழில்நுட்பத் துறையிலும், பொது வங்கி துறையிலும் நாங்கள் எங்கள் பணியாளர்களை அதிகரித்து வருகிறோம். என்ட்ரி லெவல் ஜாப்களுக்கும், எக்ஸ்பீரியன்ஸ்டு லெவல் ஜாப்களுக்கும் சுமார் 1500 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளோம்" என்று எஸ்பிஐ வங்கியின் சேர்மேன் சி.எஸ் செட்டி தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் விண்ணை எட்டி வருகிறது, டிஜிட்டல் மயம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் அனைத்து நிலைகளிலும் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து மறு தேர்வு செய்கிறோம்.
SBI வங்கி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சிறந்த வங்கி அனுபவத்தை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, SBI பேங்க் நடப்பாண்டில் நாடு முழுவதிலும் சுமார் 600 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி SBI நாடு முழுவதும் 22,542 கிளைகளைக் கொண்டுள்ளது.
எங்களிடம் கிளை விரிவாக்க திட்டங்கள் உள்ளன... புதிதாக திறக்கப்பட உள்ள இடங்கள் பல உள்ளன. அதற்காக சுமார் 600 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். இதைத் தவிர, SBI 65,000 ATM-களைக் கொண்டுள்ளது. நாங்கள் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறோம். மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் நாங்கள் வங்கி சேவையை வழங்குகிறோம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும் செட்டி கூறியுள்ளார்.
பல டெக் நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புதிதாக தேர்வு எழுதும் மாணவர்கள் ஆனாலும் சரி, ஏற்கனவே வங்கிகளில் பணிபுரிந்து மாற்று வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆனாலும் சரி சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications