இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சேவை நிறுவனமான எஸ்பிஐ, யெஸ் பேங்கில் தங்கள் வசம் இருக்கும் 13.19 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எஸ் பேங்கில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை எஸ்எம்பிசி எனப்படும் Sumitomo Mitsui Banking Corporation நிறுவனத்திற்கு, 8,889 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 21 ரூபாய் 50 காசுகள் என்ற அளவில் எஸ்பிஐ நிறுவனம் தங்கள் வசம் இருக்கும் சுமார் 4,13,44,04,897 பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.

இது தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் எஸ்பிஐ தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் செபியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் நிறுவனம் யெஸ் வங்கியில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எஸ் வங்கியில் தங்கள் வசம் இருந்த 13. 19 சதவீத பங்குகளையும் எஸ்எம்பிசி நிறுவனத்திற்கு ஒரு பங்கின் விலை 21 ரூபாய் 50 காசுகள் என விற்பனை செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ நிறுவனத்திற்கு 8088.97 கோடி ரூபாய் கிடைக்கும். யெஸ் பேங்க் என்பது இந்தியாவை சேர்ந்த ஒரு தனியார் வங்கி சேவை நிறுவனமாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு 2003 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் 1198 கிளைகளைக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது. யெஸ் வங்கியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா , ஆக்சிஸ் வங்கி, எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் பெரும்பாலான பங்குகளை தங்களுக்கு சொந்தமானதாக கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் தான் கடந்த மாதம் ஜப்பானை சேர்ந்த எஸ்எம்பிசி நிறுவனம் யெஸ் வங்கியை கையகப்படுத்துவது தொடர்பாக விண்ணப்பம் செய்து அதற்கான ரிசர்வ் வங்கியின் ஒப்புதலையும் பெற்றது. இதன் மூலம் எஸ்எம்பிசி நிறுவனம் யெஸ் வங்கியின் 51% பங்குகளை வாங்கி அதனை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் எஸ்பிஐ நிறுவனம் தன் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. அடுத்த ஓராண்டு காலத்திற்குள் இந்த பங்கு விற்பனை நடைபெற்று பணம் செட்டில் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 9ஆம் தேதி இந்திய பங்குச்சந்தையில் யெஸ் வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 20 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications