பிக்சட் டெபாசிட்கள் மூத்தக் குடிமக்களுக்கான எளிய மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும். இது சந்தையுடன் இணைக்கப்படாத முதலீடு. ஆதலால் உங்களுடைய முதலீட்டுக்கு எந்தவித சேதமும் இருக்காது. பிக்சட் டெபாசிட்களில் மொத்தமாக முதலீடு செய்து வட்டி வருமானத்தைப் பெற முடியும். ஆனால் பல்வேறு வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் பிக்சட் டெபாசிட்கள் கிடைப்பதால் எங்கு முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்? என்று குழப்பமாக இருக்கும்.
இந்த பதிவில் 3 முன்னணி வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து எங்கு அதிக வருமானம் கிடைக்கிறது? என்பதைப் பார்ப்போம். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பிரபல வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சிலர் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிலேயே பிக்சட் டெபாசிட் முதலீட்டை செய்கின்றனர். இது முற்றிலும் தவறு.

வேறு ஏதேனும் வங்கியில் அதிக வருமானம் கிடைத்தால், நீங்கள் அங்கு முதலீடு செய்வது காலப்போக்கில் உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த பதிவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் HDFC பேங்க் ஆகிய வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து, எங்கு லாபம் அதிகம் என்பதைப் பார்ப்போம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மூத்த குடிமக்கள் ரூ.5 லட்ச ரூபாயை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால் 7.30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.37,511 ரூபாய் வட்டி கிடைக்கும். ஒரு வருடத்திற்கு பிறகு ரூ.5,37,511 பெற்றுக் கொள்ளலாம்.
HDFC பேங்க்: HDFC பேங்க்கில் மூத்த குடிமக்களுக்கு 1 வருட டெபாசிட்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே HDFC பேங்கில் 1 வருடத்திற்கு மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 7.10 சதவீத வட்டி விகிதத்தில், வட்டி வருமானமாக ரூ.36,456 கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் ரூ.5,36,456 பெற்றுக் கொள்ளலாம்.
ICICI பேங்க்: ICICI பேங்கில் 1 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.20 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்கில் மூத்தக் குடிமக்கள் 1 வருடத்திற்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது வட்டியாக ரூ.36,984 கிடைக்கும். அப்படியானால் முதிர்வுத் தொகையாக 3,36,984 ரூபாயாக இருக்கும். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிக வருமானத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications