நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எஸ்பிஐ ஏடிஎம்களில் செய்யப்படும் அனைத்து ஏடிஎம் பரிவர்த்தகளைகளுக்கான சேவை கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும் என அறிவித்துள்ளது.
இது ஜூன் 30 வரையில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த முறை மினிமம் பேலன்ஸ் சலுகை குறித்தான அறிக்கையும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் சலுகை
கடந்த மார்ச் 24 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா வைரஸ் தாக்கமானது, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அப்போது வெளியிட்டார். அதில் ஏடிஎம் மற்றும் வங்கி சலுகை குறித்த அறிவிப்புகளும் அப்போது வெளியானது.
ஏடிஎம் கட்டணம் இல்லை
இதற்கிடையில் தான் நாட்டில் நிலவி வரும் அசாதரான சூழ்நிலைக்கு மத்தியில், மக்களுக்கு சிறிது உதவும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு எந்த வங்கிகளில் வேண்டுமானலும் டெபிட் கார்டு உரிமையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம், அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் அப்போது அறிவித்தார். ஆனால் தற்போது அதனை எஸ்பிஐ ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
முன்பிருந்த சலுகை
எஸ்பிஐ தனது சில வாடிக்கையாளர்களுக்கு 8 பரிவர்த்தனைகளை அளித்து வருவதாகவும், அதில் எஸ்பிஐயில் 5ம், இதே மற்ற வங்கிகளில் மூன்று முறையும் இலவசமாக பெற முடியும். இதே மெட்ரோ அல்லாத நகரங்களில் 10 பரிவர்த்தணைகளை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. இதில் எஸ்பிஐ ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற ஏடிஎம்மில் 5 முறையும் பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும்.
இது தான் காரணம்
இப்படி ஒரு நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ இப்படி பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. நாட்டில் சில பகுதிகளில் 2 மணி வரை மட்டுமே ஏடிஎம்கள் செயல்பட்டு வருவதாகவும், சில இடங்களில் இல்லாததாலும் இப்படி அதிரடி சலுகையினை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications